Trending Cinemas Now
விமர்சனம்

பட்டாஸ் (விமர்சனம்)

படம்: பட்டாஸ்
நடிப்பு: தனுஷ் (இரட்டை வேடம்), சினேகா, நவீன் சந்திரா, மெஹரீன் பிர்சஸடா, நாசர், முனிஷ்காந்த், கேபிஒய் சதிஷ்
தயாரிப்பு: செந்தில் தியாகராஜன், அருண் தியாகராஜன்
இசை: விவேக், மெர்வின்
ஒளிப்பதிவு: ஓம் பிரகாஷ்
இயக்கம்: ஆர்.எஸ்.துரை செந்தில்குமார்
தமிழரின் கலை, கலாச்சாரத்தை அழிக்கும் முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில் அழியும் நிலையிலி ருக்கும் அடிமுறை என்ற சண்டை கலைக்கு உயிர் கொடுத்திருக்கிறது பட்டாஸ் படம்.
சேர, சோழர் காலத்தில் போர்களின்போது பயன்படுத் தப்பட்ட அடி முறை கலையை திரவியம் பெருமாள் (தனுஷ்) நுணுக்கமாக கற்று வைத்திருக்கிறார். அதே கலையை கற்க முடியாமல் திணறுகிறார் நவீன் சந்திரா. அவரை எல்லோர் முன்னிலையிலும் மட்டம் தட்டு கிறார் ஆசான் நாசர். இதனால் கோபித்துக்கொண்டு செல்லும் நவீன் ஒரு கட்டத்தில் வெளிநாட்டுகாரர் களுடன் திரும்பி வருகிறார். கிக் பாக்ஸிங் கலையில் உலக சேம்பியன் ஆகி இருப்பதாகவும் அதற்காக ஆட்களை சேர்க்க வந்திருப்பதாகவும் நாசரிடம் கூறுகிறார். அடிமுறை, கிக் பாக்ஸிங் இரண்டில் சிறந்த கலை எது என்ற வாதம் எழ மோதிப்பார்த்து தீர்மானிக்க முடிவு செய்யப்படுகிறது. தனுஷ் அடிமுறை கலைப்படியும், நவீன் கிக் பாக்ஸிங் முறைப்படியும் மோதுகின்றனர். இதில் தனுஷ் வெற்றி வாகை சூடுகிறார். கோபம் அடைந்த நவீன் அடிமுறை வீரர்களுக்கு விஷம் கொடுத்துவிட்டு தந்திரமாக நாசர். மற்றும் தனுஷை கொன்றுவிட்டு தப்பிச் செல்கிறார். தனுஷின் மனைவி சினேகா கணவர தனுஷை கொன்றவர் களை பழிவாங்க முடிவு செய்கிறார். வெள்ளைக்காரன் ஒருவனை கொன்றதற்காக ஆயுள் தண்டனை அனுபவித்து திரும்பி வருகிறார். இந்நிலையில் சிறுவயதில் காணாமல்போன தனது மகன் தனுஷை கண்டுபிடிக்கிறார் சினேகா. அவரை வைத்து தன் கணவரை கொன்ற நவீனை எப்படி பழிவாங்குகிறார். அடிமுறை கலையை அனைவருக் கும் தெரியும் வகையில் எப்படி பிரபலப்படுத்துகிறார் என்பது கிளைமாக்ஸ்.

இரட்டை வேடத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம். தோற்றத்திலும், நடிப்பிலும் இருவேறு பரிமாணங்களை காட்டியிருப்பது வேடத்திற்கு கிடைக்கும் வெற்றி. நண்பருடன் சேர்ந்து சின்ன சின்ன திருட்டுக்கள் செய்யும் தனுஷ் அதேபகுதி யில் வேலைக்கு சென்று வரும் மெஹரீனுக்காக அவரது சர்டிபிகேட்களை திருடி வர கிக் பாக்ஸிங் அமைப்புக்கு செல்கிறார். ஆயுள் தண்டனை முடிந்து வெளியில் வரும் சினேகாவும் அதே அமைப்புக்கு வருகிறார். கையால் தயாரித்த ஆயுதத்தை அம்புபோல் எய்து நவீனை கொல்ல முயல்கிறார். அங்கு நடக்கும் குழப்பம் கதையை சுவாரஸ்யமாக நகர்த்துகிறது.

சினேகாவை தனி இடத்தில் வைத்துகொல்ல வரும் ஆட்கள் அவரை அடித்து தாக்கும்போது அவர்தான் தனது தாய் என்பதை அறிந்து தனுஷ் திடீரென்று எதிரிகளை தாக்கி துவம்சம் செய்யும்போது அடிமுறை கலையின் ஆரம்பம் தொடங்குகிறது. முக்கோண முடிச்சி போட்டு குண்டர்களை தனுஷ் தாக்கும்போது பின்னணியில் தந்தை தனுஷின் முக்கோண முடிச்சி காட்சிகளை காட்டி விறுவிறுப்பை அதிகரிக்கிறார் இயக்குனர்.
திரவியம் பெருமாள் பாத்திரத்தில் தனுஷ் தோன்றும் படத்தின் 2ம் பாகம் தமிழ் கலையை உயர்த்தி பிடிக்கும் வசனங்களுடன் சீறுகிறது. அதுவும் வெளிநாடு சென்று கிக் பாக்ஸராக திரும்பும் நவீன் உடன் தனுஷ் அடிமுறை கலையை கையாண்டு தாக்குதல் நடத்தும் போது விசில் பறக்கிறது. குங்பூ, கராத்தே. கிக் பாக்ஸ் போன்ற கலைகளுக்கு தாய்க்கலை அடிமுறைதான் என்பதை ஆணித்தரமாக சொல்லியிருப்பது கதைக்கு உறுதி சேர்க்கிறது.
அடிமுறை பயிற்சியை சரியாக கற்று தனுஷ் நடித்திருக்கும் நுணுக்கம் கதாபாத்திரத்தின் பலத்தை உயர்த்திக் காட்டுகிறது. நெஞ்சில் கத்தி பாய்ந்தபோதும் அடிமுறை வீரனின் சிலை தரையில் விழாவிடாமல் தீபற்றிய உடலுடன் அதனை தாங்கி நிற்கும் தனுஷ் கண்ணுக்குள்ளேயே நிற்கிறார். சினேகாவும் அடிமுறை பயிற்சியை பெற்றது அதை பாங்காக கையாண்டிருக் கிறார். சண்டை காட்சிகளில் தெரிகிறது.
மெஹரின் பிர்சடா மேக்அப் கலையாமல் நடித்துவிட்டு செல்கிறார். அடிமுறை கலை ஆசானுக்கு நாசர் பொருத்தமான தேர்வு. பஞ்சராக வரும் சதீஷ் சேட்டை சிரிக்க வைக்கிறது.

பட்டாஸ்- அழியும் நிலையில் உள்ள அடிமுறை கலைக்கு உயிர்கொடுக்கிறது.

 

Related posts

777 சார்லி (பட விமர்சனம்)

Jai Chandran

மியூசிக் ஸ்கூல் ( பட விமர்சனம்)

Jai Chandran

ஒ எம் ஜி ( பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend