Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

லவ் மேரேஜ் (பட விமர்சனம்)

படம்: லவ் மேரேஜ்

நடிப்பு: விக்ரம்.பிரபு, சத்யராஜ், சுஷ்மிதா பட், மீனாக்ஷி தினேஷ், ரமேஷ் திலக், கஜராஜ், அருள்தாஸ்

தயாரிப்பு:சுவேதா ஶ்ரீ, ஶ்ரீ நிதி சாகர்

இசை: சான் ரோல்டன்

ஒளிப்பதிவு: மதன் கிரிஸ்டோபர்

இயக்கம்: சண்முக பிரியன்

பி ஆர் ஒ: யுவராஜ்

25 வயது முதல் திருமணம் செய்ய பெற்றோர் பெண்களை காட்டியும் திருமணத்துக்கு ஒப்புக்கொள்ளாமல் இருக்கிறார் ராம் (விக்ரம் பிரபு). 30 வயதில் திருமணத்துக்கு தயாராக இருந்தும் பார்க்கும் பெண்கள் அவரை ரிஜெக்ட் செய்கிறார்கள். ஒரு வழியாக கோபி செட்டிபாளையத்தில் அம்பிகா (சுஷ்மிதா பட் ) என்ற பெண்ணை பார்க்க குடும்பத்துடன் செல்கிறார் ராம். இருவருக்கும் திருமணம் நிச்சயித்து ஊருக்கு திரும்ப எண்ணும்போது கொரோனா லாக்டவுன் அறிவிக்கப்படுகிறது. இதனால் ராம் குடும்பத்தார் பெண் வீட்டிலேயே தங்க வேண்டியதாகிறது. இந்நிலையில் ராம் , அம்பிகா மனம் விட்டு பழக முயல்கின்றனர். திடீரென்று அம்பிகா திருமணம்
செய்ய மறுத்து வீட்டை விட்டு ஓடிவிடுகிறார். இருகுடும்பதாரும் அதிர்ச்சி அடைகின்றனர். அதன்பிறகு நடப்பது என்ன என்பதை சுவாரஸ்யமாக சொல்கிறது கிளைமாக்ஸ்.

இப்போதுள்ள 90ஸ் கிட்ஸ் திருமண புரிதல் இல்லாமல் செய்யும் சேட்டைகளை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியிருக்கிறார் சண்முக பிரியன்.

விக்ரம் பிரபுக்கு இது வித்தியாசமான பாத்திரம். தனக்கு
திருமணத்துக்கு பெண் கிடைக்கவில்லை என்று மற்றவர்கள் நக்கலாக பேசும்போதும், கிண்டல் செய்யும்போதும் கூனிக் குறுகிப்போவது, கண்களில் ஒரு பிரிதாபத்தையும், ஏமாற்றத்தையும் காட்டி மனதில் இடம் பிடிக்கிறார். ஆனால் உடல் மொழி நடிப்பை வெளிக்கட்டுவதில் சிரமப்பட்டிருக்கிறார். வீட்டிலேயே இரண்டு ஜாம்பவான்கள் (சிவாஜி, பிரபு) இருக்கிறார்கள் அவர்கள் நடித்த படங்களை பார்த்தாலே விக்ரம் பிரபுவுக்கு உடல் மொழி நடிப்பு தன்னால் பிறக்கும்.

சின்னத்தம்பி உள்ளிட்ட பல படங்களில் பிரபு காட்டியிருக்கும் வெட்கம், அவமரியாதை, கோபம், அழுகை, கலகலப்பு என எல்லாவற்றிலும் கைதேர்ந்தவராக இருந்தார். சமீபத்தில் வெளியான ராஜபுத்திரன் படத்தில் கூட அவ்வளவு பெரிய உடம்பை வைத்துக் கொண்டும் பிரபுவின் உடல் மொழி நடிப்பில் ஆயிரம் ரியாக்ஷன் இருந்ததை மறக்க முடியாது. ஆனால் விக்ரம் பிரபுவிடம் மிஸ் ஆவது இந்த உடல் மொழி நடிப்பு மட்டும்தான். ஸ்டிப்பான தனது உடல் ஸ்டைலை மாற்றி வளைந்து நெளிந்து இயல்பாக சிரித்து நடிக்கும் அந்த உடல்மொழி நடிப்பு டெக்னிக்கை புரிந்து கொண்டால் அவரை திரையுலகில் யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

விக்ரம்பிரபுக்கு ஜோடி போட்டிருக்கும் சுஷ்மிதா பட் முகத்தில் ஒரு சோக ரேகை நிழலாடும்போதே இவர் ஏதோ ஏடாகூடம் செய்யப்போகிறார் என்ற சந்தேகம் தட்டுகிறது. அதை திடீர் ஷாக்காக தருவது டிவிஸ்ட். அதன் பிறகு கதையை சோகத்தில் ஆழ்த்தாமல் சுவைபட அமைத்திருப்பது புத்திசாலித்தனம்.

2வது நாயகியாக வரும் மீனாக்ஷி தினேஷ் சுட்டித்தனமான நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். ரமேஷ் திலக் கோஷ்டி காமெடி அரட்டையடிக்கின்றனர். வில்லன் இல்லாத குறையை போக்கிவிடுகிறார் அருள்தாஸ் எதார்த்த தந்தையாக நடித்துள்ளார் கஜராஜ்.

எம் எல் ஏவாக  மின்னல்போல் வந்து சென்றாலும் நக்கலான பேச்சால் முத்திரை பதிக்கிறார் சத்யராஜ்.

சுவேதா ஶ்ரீ, ஶ்ரீ நிதி சாகர் தயாரித்திருக் கின்றனர்.

சான் ரரோல்டன் இசையில் பாடல்கள் இனிமை, ஆனால் அது போதவில்லை.

மதன் கிரிஸ்டோபர் கோபி செட்டி பாளையத்தை பசுமை மாறாமல் படமாக்கியிருக்கிறார்.

சண்முக பிரியன் கதை தேர்வு காமெடிக்கு உச்சகட்ட இடம் உள்ள படம். ஆனால் அதை 50 சதவீதம் மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார் . சுந்தர் சியின் ஒன்றிரண்டு காமெடி படங்களை மாடலாக வைத்து காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இயக்கியிருந்தால் இது அரங்கை குலுங்க வைக்கும் அதிரடி காமெடி கன்டென்ட் படமாக இருந்திருக்கும்.

சாதி ஒழிப்பு திருமணம், திருமணத்துக்கு வயது ஒரு தடையல்ல போன்ற கருத்துக்களை படம் பேசியிருப்பது தன்னம்பிக்கை தரும் சேதிகள்.

லவ் மேரேஜ் – குடும்பத்துடன் குறிப்பாக திருமணத்துக்கு வெட்கப்படும் 90ஸ் கிட்ஸ்கள் பார்க்க வேண்டிய படம்.

Review By

ஜெயச்சந்திரன்.கே.
www trendingcinemasnow com

Related posts

Ganesh Acharya Choreography  For Nagabandham Song

Jai Chandran

15 ரூபாய் வாடகை வீட்டில் வசித்த சிவகுமார்..

Jai Chandran

கவுதம் மேனன். வெற்றிமாறன் உள்ளிட்ட 4 இயக்குனர்களின் “பாவ கதைகள்’ . நெட்ஃப்ளிக்ஸ் தயாரிக்கும் முதல் தமிழ் திரைப்படம்..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend