நடிகர் விஜய் ரூ 1.30 கோடி நிதி உதவி..
பிரதமர், முதல்வர், பெப்சிக்கு அளித்தார்..
உலக அளவில் மக்களையும், அரசாங்கங்களையும் ஆட்டிப்படைத்து வருகிறது கொரோனா வைரஸ் தொற்றுநோய். இதுவரை உலகம் முழுவதும் லட்சக்கணக்கவர்கள் பலியாகி இருக்கின்றனர். இந்தியா விலும் நோய் பரவியதால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதனால் சினிமாதுறை உள்ளிட்ட எல்லா தொழில்களும் முடங்கியிருக்கிறது. வேலை இல்லாததால் பெரும்பாலான மக்கள் வருமானம் இல்லாமல் அன்றாடம் வாழ்க்கையை நடத்த கஷ்ட்டப்பட்டு வருகின்றனர்.
கொரோனா நிவாரண பணிகளுக் காகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் அரசும் பெப்சி அமைப்பும் நிதி திரட்டி வருகின்றன. பல நடிகர் நடிகைகள் நிதி உதவி அளித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் விஜய் இன்று ரூ 1.30 கோடி நிதி அளித்தார். பிரதமர் நிவாரண நிதியாக ரூ 25 லட்சம், தமிழக முதல்வர் நிவாரண நிதியாக ரூ 50 லட்சம், பெப்சி அமைப்புக்கு ரூ.25 லட்சம் அளித்தார். தவிர கேரள முதல்வர் நிவாரண நிதி ரூ.10 லட்சம், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி qஆகிய மாநில முதல்வர் நிவாரண நிதியாக தலா ரூ.5 லட்சம் அளித்திருக்கிறார்.
#Actor Vijay donates Rs 1.30 crore to corona relief works
#விஜய் #பெப்சி