அமெரிக்காவில் கிரீன் கார்டு வழங்க 60 நாட்கள் தடை..
சீனாவில் யூகான் நகரில் பரவிய கொரோனா அடுத்த டுத்த சில வாரங்களில் அமேரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து இந்தியா என உலகின் பெரும்பாலான நாடுகளுக்கும் பரவியது. தற்போது வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனா வைரஸ் பிடியில் சிக்கி இருக் கிறது. 45 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களை பலி வாங்கியிருப்பதுடன், 8 லட்சத்துக்கும் அதிகமான வர்கள் கொரோனாவில் பாதிக்கப்பட்டிருக்கின் றனர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அதிபர் டிரம்ப் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அடுத்த கட்ட நடவடிக்கையாக குடியேற்றத்துக்கு கட்டுப்பாடு விதித்திருக்கிறார் டிரம்ப். அடுத்த 60 நாட்களுக்கு கிரீன் கார்டு வழங்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
‘அமெரிக்கர்களின் பணி பாதுகாப்புக் காகவும் அவர்களின் நலன்காக்கவும் தற்காலிகமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக் கிறது’ என டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.
#Donald Trump suspends issue of new green cards for 60 days
#கிரீன்கார்டு #டிரம்ப்