படம்: தாராள பிரபு
நடிப்பு: ஹரீஸ் கல்யாண், தன்யா ஹோப், விவேக், சச்சு, அனுபாமா, ஆர்.எஸ்.சிவாஜி
தயாரிப்பு: ஸ்கிரீன் சீன் மீடியா
இசை: அனிருத், பரத், இன்னோ கெங்கோ, கபேர் வாசுகி, மேட்லி ப்ளூஸ், ஊருகா – திபேன்ட், ஷான் ரோல்டன், விவேக் மெர்வின்,
சீன் ரோல்டன், விவேக் இன்னோ ஜென்கா. கபெர் வாசுகி, மேட்லி ப்ளூஸ்,
ஒளிப்பதிவு: செல்வகுமார்
இயக்குனர்: கிருஷ்ணா மாரிமுத்து
காலம்போகிற போக்கில் எல்லா மனிதர்களுமே டென்ஷனுக் குள்ளாகி விட்டார்கள். அதன்விளைவு அடுத்த தலைமுறையை உற்பத்தி செய்யும் தகுதியையே இழந்துவிடுகிறார்கள் என்பதுதான் கதையின் கரு.
பாரம்பரிய ஆயுர்வேத முறையில் அழகு நிலையம் நடத்துகிறார் சச்சு பாட்டி. ஹரிஸ் கல்யாண் அவரது தாய் உடனிருந்து அழகு நிலையத்தை பராமரிக்கின்றனர். கால் பந்தாட்டத்தில் சிறந்து விளங்கும் ஹரிஸ் ஐடி கம்பெனியில் வேலைக்கு முயற்சிக்கிறார். குழந்தை இல்லாத பெற்றோருக்கு செயற்கை முறையில் கருத் தரிப்பு செய்து குழந்தை பாக்கியம் தரும் டாக்டராக வருகி றார் விவேக். தனது மருத்துவ மனைக்கு ஸ்பெர்ம் டோனர் (விந்து தானம்) செய்ய ஒருவரை தேடும் விவேக், இளைஞர் ஹரிஸின் துடிப்பான இளமை யை கண்டு அவரையே டோனாராக மாற்ற முயற்சிக் கிறார். பலமுறை அவரை பின்தொடர்ந்து ஸ்பெர்ம் டொனேஷன் பற்றி கேட்கும்போது மறுக்கிறார் ஹரிஸ். தனது கால்பந்தாட்ட பயிற்சியாளரின் மனைவி ஒருவர் குழந்தை பாக்கியத்துக் காக ஏங்கி இறப்பதை அறிந்த தும் ஸ்பெர்ம் டொனேஷன் செய்ய சம்மதித்து வீட்டுக்கு தெரியாமல் இந்த வேலையை ரகசியமாக செய்கிறார். ஒரு கட்டத்தில் தன்யாவுடன் ஹரிஸுக்கு காதல் மலர்கிறது. இருவரும் வேறு மாநிலம் வேற்று மொழி என்பதுடன் தன்யா ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர் என்ற சிக்கலால் இவர்களின் திரு மணம் நடக்குமா என்ற கேள்வி எழுகிறது. திருமணத்துக்கு தடை ஏற்படும்போது டாக்டர் விவேக் உடனிருந்து திருமணத்தை நடத்தி வருகிறார். தன்யாவுக்கு குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை. ஆனால் அவருக்கு அதற்கான பாக்யம் இல்லை என்று டாக்டர்கள் கூறுகின்றனர். யார் யாருக்கோ விந்துதானம் செய்த ஹரிஸ் தனக்கொரு குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதநிலை ஏற்பட்டதை எண்ணி கலங்குகிறார். ஒரு கட்டத்தில் குழந்தை ஒன்றை தத்தெடுக்க முடிவு செய்கின் றனர். தத்தெடுக்கப்படும் குழந்தை யாருக்கோ ஹரிஸ் செய்த விந்துதானத்தால் பிறந்தது என்பது தெரியவரும் போது குடும்பமே நிலை குலைந்துபோகிறது. ஹரிஸை பிரிந்து செல்கிறார் மனைவி தான்யா. இவர்கள் மீண்டும் இணைகிறார்களா என்பதற்கு விடை சொல்கிறது கிளை மாக்ஸ்.
அடெல்ட் விஷயம்கொண்ட படமாக இருந்தாலும் அதனை நாசுக்காக எந்த இடத்திலும் விரசம் தட்டாதளவுக்கு இயக்குனர் கிருஷ்ணா மாரிமுத்து கையாண்டிருப்ப தற்கு முதல்பாராட்டு. ஒரு சீனியர் நடிகர் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தை ஏற்று மிக எளிதாக அதை ஹரிஸ் கடந்து சென்றிருப்பது அழகு. ஹரிஸ் செல்லும் இடத்திற்கெல்லாம் பின்தொடர்ந்து செல்லும் விவேக் ஸ்பெர்ம் டொனேஷன் செய்யும்படி அவரிடம் கெஞ்சுவது தொடர் நகைச் சுவை.
விவேக் துரத்தலும், ஹரிஸ் ஓட்டமுமாக சென்றுக்கொண்டி ருக்கும் காட்சிகள் திடீரென்று ஹீரோயின் தன்யாவின் என்ட்ரிக்கு பிறகு ஸ்கிரிப்ட் தனது களத்தை காதலுக்கு மாற்றிக்கொள்கிறது. கொள்ளை அழகாக, ஸ்டைலாக இருக்கும் தன்யாவின் நடிப்பும் ஸ்டைலும் அளவுமிகவில்லை.
தமிழரான ஹரீஸ், கன்னடம் பேசும் தன்யாவை மணப்பதில் ஏற்படும் இடியாப்ப சிக்கலை எப்படி தீர்க்கப்போகிறார்களோ என்று எதிர்பார்க்கும்போது அங்கு என்ட்ரி தரும் விவேக் எளிதாக சிக்கிலை தீர்ப்பதும் பின்னர் கிளைமாக்ஸில் விவேக் செய்த குழப்பத்தாலேயே மீண்டும் ஹரிஸ் குடும்பம் சிக்கலுக்குள் மாட்டும்போது இந்த பிரச்னைக்கு எப்படி தீர்வு காணப்போகிறார்கள் என்ற கேள்வியை எழ வைத்து அதற்கு நம்பும்படியான தீர்வை சொல்லும்போது மனம் நெகிழ் கிறது.
கிளைமாக்ஸ் காட்சியில் 49 குழந்தைகளுக்கு ஹரீஸ் தானம் செய்த உயிரணுக்கள்தான் காரணம் என்ன என்று தெரியவ ரும்போது நெகிழ்ச்சியுடன் சிரிப்பும் சேர்ந்துகொள்கிறது.
இந்தியில் சில வருடங்களுக்கு முன் வெளியாகி ஹிட்டான விக்கிடோனர் படத்தின் தமிழ் ரீமேக்தான் தாராள பிரபு. அனிருத், விவேக் மெர்வின், சீன் ரோல்டன் உள்ளிட்ட 8 இசை அமைப்பாளர்கள் இணைந்து இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்கள். இதுவொரு புது முயற்சி. செல்வகுமாரின் ஒளிப்பதிவு தெளிவு.
ஊசிமுனை பிசகினாலும் ஆபாச படமாகி விடக்கூடிய கதையை கத்திமேல் நடப்பதுபோல் நடந்து கண்ணியமாக இயக்கி நெகிழ்ச்சியுடன் நிறைவு செய்திருப்பது பலம்.
தாராள பிரபு- இளைஞர்களுக்கும், தம்பதிகளுக்குமான படம்