கொரோனா வைரஸ் பீதியால் சபாநாயகர் முடிவு..
கொரோனா வைரஸ் வேகமாக பரவும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைளில் தீவிரம் காட்டி வருகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட் டுள்ளது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடந்து வந்தது. கொரோனா பரவி வரும் நிலையில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை யும் ஒத்திவைக்க வேண்டும் என்று திமுக காங்கிரஸ் எதிர்க் கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக சபாநாயகரிடம் மனு ஒன்றை யும் அளித்தார்.
சட்டப்பேரவையை உடனடியாக ஒத்திவைக்குமாறு எதிர் கட்சி கள் வலியுறுத்தி வந்த நிலை யில், நேற்று காலை 10.30 மணிக்கு சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் செவ்வாய்க் கிழமையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடரை நிறைவு செய்ய முடிவெடுக்கப்பட்டது அதன்படி இன்றுடன சட்டப்பேரவை முடிவடைந்து தேதி குறிப்பிடா மல் ஒத்திவைக்கப்பட்டது .
#Tamil Nadu Assembly session to conclude on Tuesday due to corona scare