டாஸ்மாக் கடை திறக்க தடை இல்லை..
ஐகோர்ட் உத்தரவு..
சென்னை, மே. 6:
கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன் முன்தினம் சிவப்பு ஆரஞ்சு, பச்சை மண்டலங்களுக்கு ஏற்ப கட்டுப்பாடு கள் தளர்த் தப்பட்டன. அதன்படி சிவப்பு மண்டலம் தவிர மற்ற இடங் களில் கட்டுப்பாடுகளுடன் 7-ந்தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப் படும் என தமிழக அரசு அறிவித்தது.
அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.
நீதிபதிகள் முன்னிலையில் இன்று வழக்கு விசார ணைக்கு வந்தது.
கொரோனா தொற்று தடை காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டால் தொற்று அதிகம் பரவ வாய்ப்புள்ளது என வாதிடப்பட்டது. அதற்கு அரசு தரப்பில் அளிக்கப்பட பதிலில்,’மது கடைகள் மூடப்பட்டிருப்பதால் அரசுக்கு தினமும் பல கோடி நஷ்டம் ஏற்படுகிறது. சமூக இடைவெளி மற்றும் தொற்று பரவமலிருக்கும் வகையில் தகுந்த கட்டுப்பாடுகளுடன் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது’ என கூறப்பட்டது
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் டாஸ்மாக் திறக்க தடை விதிக்க முடியாது ஆனால் கொரோனா தொற்று பாரவாமல் இருப்பதற்கான கட்டுப்பாடுகள் கடுமையாக கடை பிடிக்க வேண்டும். நபர் ஒருவருக்கு ஒரு பாட்டில்தான் விற்கவேண்டும். ஆன்லைனில் 2 பாட்டில்கள் விற்க லாம். கோர்ட் விதிக்கும் கட்டுப்பாடு மீறப்பட்டால் கடைக்கு சீல் வைக்கப்படும்’ என உத்தரவிட்டனர் .
#Now, liquor shops set to reopen in Chennai; court allows online sale
#TASMAC