Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

ஜோதிகா பேச்சு: சூர்யா சுடச்சுட அறிக்கை..

ஜோதிகா பேச்சு: சூர்யா சுடச்சுட அறிக்கை..

மனிதாபிமானம் தான் முக்கியம்..

ஜோதிகாவின் கோவில் பற்றிய பேச்சு சர்ச்சையானது. இதுகுறித்து அமைதி காத்துவந்த நடிகர் சூர்யா சுடச்சுட பதில் அளித்திருக்கிறார் அவர் கூறியதாவது :

மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதாக இல்லை என்கிற கருத்து சமூக ஊடக விவாதங்களுக்கு அப்படியே பொருந்தும் ஒரு விருது வழங்கும் விழாவில் எப்போதோ ஜோதிகா அவர்கள் பேசியது இப்போது ஊடகங்களில் செய்தியாகவும், சமூக ஊடகங்களில் விவாதமாக மாறியிருக்கிறது கோயில்களைப் போலவே பள்ளிகளையும் மருத்துவ மனைகளையும் உயர்வாக கருத வேண்டும் என்கிற கருத்தை ஜோதிகா வலியுறுத்தியதை சிலர் குற்றமாகப் பார்க்கிறார்கள். இதே கருத்தை விவேகானந்தர் போன்ற ஆன்மிகப் பெரியவர்கள் சொல்லியிருக்கி றார்கள். மக்களுக்கு உதவினால் அது கடவுளுக்கு செலுத்தும் காணிக்கை என்பது திருமூலர் காலத்தில் சிந்தனை. நல்லோர் சிந்தனைகளை படிக்காத, காது கொடுத்து கேட்காதவர்களுக்கு இது தெரிய வாய்ப் பில்லை. பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் இறைவன் உறையும் இடமாக கருத வேண்டும் என்கிற கருத்தை எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் வரவேற்கவே செய்கின் றனர். கொரோனா தொற்று காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட் டுள்ள நேரத்திலும் எங்க ளுக்கு கிடைத்த பேராதரவு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அளித்தது. அறிஞர்கள், ஆன்மிகப் பெரியவர்களின் எண்ணங்களை பின்பற்றி வெளிப்படுத்திய அந்த கருத்தில் நாங்கள் உறுதியாக இருக்கி றோம் மதங்களை கடந்து மனிதம் முக்கியம் என்பதே எங்கள் பிள்ளை களுக்கு சொல்லித் தர விரும்புகி றோம். தவறான நோக்கத்தோடு தரைகுறைவாக சிலர் அவதூறு பரப்பும் போதெல்லாம் நல்லோர்கள், நண்பர் கள், ரசிகர்கள் எங்களுக்கு துணை நிற்கிறார்கள். முகம் அறியாத எத்தனையோ பேர் பதிலளிக்கிறார்கள். ஊடகங்கள் சரியான விதத்தில் சர்ச்சையை கையாண்டனர். நல்ல எண்ணங்களை விதைத்து நல்ல செயல் களை அறுவடை செய்ய முடியும் என்கிற நம்பிக்கை துளிர்க்கச் செய்கிறார்கள். எங்களுக்கு உறுதுணையாக நிற்கும் அனைவருக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்.
இவ்வாறு சூர்யா கூறினார்

#suriya statement on jothika speach
#சூர்யா #ஜோதிகா

Related posts

தமிழ் திரைப்பட நடப்பு விநியோகஸ்தர்கள் சங்கம் தொடக்கம்: நடப்பு தயாரிப்பாளர்கள் வாழ்த்து

Jai Chandran

Ravi Teja, Vamsee, Abhishek Agarwal Pan Indian Film

Jai Chandran

இன்று முதல் கவிப்பேரரசு வைரமுத்துவின் நாட்படு தேறல்: கிருத்திகா இயக்கம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend