Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

ஜூன் 21ல் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்..

ஜூன் 21ல் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்..

முழு விவரம், தனி அதிகாரி அறிவிப்பு..

தமிழ் திரைப்பட தயாரிப் பாளர்கள் சங்கத்துக்கு இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கிறது. 2020-2022ம் ஆண்டுக்கான தேர்தல் வரும் வரும் ஜூன் 21ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து சங்க தனி அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் வருமாறு

தமிழ் திரைப்பட தயாரிப் பாளர்கள் சங்கத்தின் 2020-2022ம் ஆண்டு தேர்தலுக்கான இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் 09.05.2020 காலை 10 மணி முதல் சங்க அலுவலகத்தில் அலுவலக வேலை நேரமான காலை 10 முதல் மாலை 6 வரை நேரில் வந்து பெற்று கொள்ளலாம்.
(Black & white address book Rs. 500/-, colour address book Rs. 2000/-)

தமிழ் திரைப்பட தயாரிப் பாளர்கள் சங்கத்தின் 2020-2022ம் ஆண்டிற்கான தேர்தல் வருகிற ஜூன் 21ம் தேதி (21.06.2020) நடைபெற வுள்ளது. அதற்கான அட்டவணை உறுப்பினர்கள் கவனத்திற்கு தெரிவித்து கொள்கிறோம்.
தேர்தல் அட்டவணை விவரம்:
1) 11.05.2020 காலை 10 மணி முதல் 14.05.2020 மாலை 5 மணி வரை வேட்புமனு தாக்கலுக்கான விண்ணப் பங்கள் சங்க அலுவலகத் தில் வழங்கப்படும். (ரூ.100 செலுத்தி உறுப்பினர்கள் பெற்றுக்கொள்ளலாம்).
2) 14.05.2020 மாலை 5 மணிக்கு மேல் விண்ணப் பங்கள் வழங்கப்பட மாட்டாது.
3) 15.05.2020 காலை 10 மணி முதல் 19.05.2020 மாலை 4 மணிக்குள் பூர்த்தி செய்யப் பட்ட விண்ணப்ப படிவங் களை சங்க அலுவலகத்தில் மூடி முத்திரை வைக்கப்/பட்டுள்ள பெட்டியில் சேர்த்து விட வேண்டும். (விண்ணப்ப படிவங்களை தபால் அல்லது courier-ல் அனுப்பும் உறுப்பினர்கள் 19.05.2020 மாலை 4 மணிக்குள் சங்க அலுவலகத்திற்கு கிடைக்கு மாறு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்படுகிறது)
4) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் அனைத்தும் சங்க அலுவல கத்தில் உள்ள மூடி முத்திரை யிட்ட பெட்டியில்
19.05.2020 மாலை 5 மணிக்கு சீல் வைக்கப்படும்.
5) 20.05.2020 காலை 10 மணி முதல் 24.05.2020 மாலை 4 மணி வரை வேட்புமனு விண்ணப்பங்களை திரும்ப பெற்று கொள்ளலாம். மாலை 4 மணிக்கு மேல் விண்ணப்பங்களை திரும்ப பெற இயலாது.
6) 24.05.2020 அன்று மாலை 6 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
25.05.2020 அன்று இறுதி வேட்பாளர் பட்டியல் தேர்தலில் வாக்களிக்கும் தகுதிப்பெற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் தபால் அல்லது courier மூலம் அனுப்பி வைக்கப்படும்.
தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் 21.06.2020 அன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.
பின்னர் மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
கொரணா வைரஸ் ஊரடங்கு உத்தரவு முடிந்தவுடன் தேர்தல் நடைபெறும் இடம் விசாரிக்கப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும்.
தேர்தலில் போட்டியிடும் உறுப்பினர்களுக்கான கட்டண விவரம் பின்வருமாறு:
தலைவர் பதவிக்கு – ரூ. 1,00,000/- (ஒரு லட்சம் மட்டும்)
மற்ற நிர்வாகிகள் பதவிக்கு – ரூ. 50,000/- (ஐம்பதாயிரம் மட்டும்)
செயற்குழு உறுப்பினர் பதவிக்கு – ரூ. 10,000/- (பத்தாயிரம் மட்டும்)
இவ்வாறு சங்க
தனி அலுவலர்-தேர்தல் அதிகாரி தெரிவித்திருக் கிறார்.
#Tamil Producers Council Election Date Anounced
#தமிழ்திரைப்படத்தயாரிப்பாளர்சங்கம்

Related posts

ஜெயம் ரவியின் புதிய பட பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்

Jai Chandran

லயோலா கல்லூரியில் புதிய பட்டயப் படிப்பு

Jai Chandran

பேய் மாமா படத்தில் காமெடி வேடம் ஏற்றது பற்றி நடிகை ரேகா

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend