ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன், என் ஜி கே போன்ற படங்களை இயக்கிய செல்வராகவன் புதுப்பேட்டை பட 2ம்பாகம் இயக்க உள்ளதாக கூறப்பட்டது இந்நிலையில் அவர் ’சாணிக் காயிதம்’என்ற படத்தின் மூலம் செல்வராகவன் ஹீரோவாகிறார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார்.
இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். ஏற்கனவே இவரது இயக் கத்தில் பாரதிராஜா, வசந்த் ரவி, ரவீனா நடித்துள்ள ராக்கி படம் முடிவடைந் துள்ளது
செல்வராகவனுக்கு தம்பியும் நடிகருமான தனுஷ் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.’இந்த உலகம் உன்னுடைய நடிப்பு திறமை யை நான் பார்த்துபோலவே பார்க்கப்போகிறது. சாணிக் காயிதம் படத்துக்கு வாழ்த் துக்கள்’ என கூறி உள்ளார் தனுஷ்.