சர்ச்சையில் ஜோதிகா படம்..
இணைய தளத்தில் வெளியிடுவதால் அதிர்ச்சி..
வழக்கறிஞர் வேடத்தில் ஜோதிகா நடிக்கும் படம் பொன்மகள் வந்தாள். பிரெட்ரிக் இயக்கி உள்ளார். மேலும் வழக்கறிஞர்களாக கே.பாக்யராஜ், தியாகராஜன், பாண்டியராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன் ஆகியோர் நடிக் கின்றனர். 2டி பட நிறு வனம் சார்பில் சூர்யா தயாரித்தி ருக்கிறார்.
கொரரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க ஊரடங்கு பிறப்பிக் கப்பட்டிருப்பதால் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கிறது. இதனால் புதிய படங்கள் வெளியிட முடியவில்லை.
இநிலையில் பொன்மகள் வந்தாள் படம் அமேசான் பிரைமில் வெளியாகிறது. தியேட்டரில் வெளிவருவதற்கு முன் நெட்டில் ஒ டி டி தளத்தில் வெளியிடுவதற்கு தியேட்டர் அதிபர்கள் அதிர்ச்சி அடைந்திருப்ப துடன் எதிர்ப்பு தெரி வித்துள்ளனர். சூர்யா பட நிறுவனம் தயாரிக்கும் படங்களுக்கு தடை விதித்துள்ளனர்
திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் பன்னீர் செல்வம் இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது :
பொன் மகள் வந்தாள் திரைப்படம் ஒ டி டி இணைய தளம் வழியாக வெளியாவது அதிர்ச்சியில் அளிக்கிறது. தியேட்டரில் படம் வெளியிட்ட பிறகே இணைய தளத்தில் தளத்திற்கு படங்களை தர வேண்டும் என்ற விதி இருக் கிறது. இதுபற்றி
தயாரிப்பாளரிடம் பேசி ஒ டி டி இணைய தளத்தில் வெளியிடக் கூடாது என்று கேட்டபோது ஏற்க வில்லை. இனி குறிப்பிட்ட பட நிறு வனம் மற்றும் தொடர்புள்ள நிறுவனங்கள் தயாரிக்கும் படத்தை எந்த திரையரங்கிலும் வெளியிட கூடாது என அனைத்து திரை அரங்கி னரும் முடிவு செய்துள்ளனர்.
இவ்வாறு பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார
#jothika’s new film release ott platform #suriya
#பொன்மகள் வந்தாள்
#ponmakalvanthal