அழுத்தமான கதை, வித்தியாசமான கரு, திரைக்கதை அமைப்பில் நவீனம், உருவாக்கத்தில், தொழில்நுட்ப வல்லமை என அசத்தும் படங்களுக்கு, ரசிகர்களிடம் எப்போதும், எல்லை தாண்டி பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இணையம் பரவிவிட்ட நவீன இந்தியாவில், ஒரு மொழியில் ஹிட்டடிக்கும் படங்களுக்கு, மற்ற மொழி ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
சமீப காலங்களில் தென் இந்திய திரைப்படங்கள் பெரும் விலையில் ஹிந்தியில் சாட்டிலைட் ரைட்ஸ் வாங்கப்பட்டு அங்கு மொழிமாற்றம் செய்து திரையரங்குகளிலும், தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்படுகிறது. நம் தென்னிந்திய படங்களில் தமிழ் படங்களுக்கென்றே பெரும் ரசிகர் கூட்டம் அங்கே இருந்து வருகிறது. இந்த நிகழ்வுகள் “ப்ரேக்கிங் நியூஸ்” படக்குழுவிற்கு தேன் தடவிய உற்சாக செய்தியாக தற்போது மாறியுள்ளது. இன்னும் படமே வெளிவராத நிலையில் படத்தின் கதை மற்றும் உருவாக்கத்தின் ஈர்ப்பில் “ப்ரேக்கிங் நியூஸ்” படம் முன்னெப்போதும் இல்லாத அளவில் ஹிந்தியில் 1.8 கோடிக்கு ரைட்ஸ் விற்கப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.
இது குறித்து ராகுல் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் திருக்கடல் உதயம் கூறியதாவது…
தயாரிப்பாளராக ஒரு நல்ல படத்தை உருவாக்குவதில் பெரு மகிழ்ச்சியாக இருக்கிறேன். அதே நேரம், நம் தமிழ் படங்களுக்கு வட இந்திய நகரங்களில் கிடைக்கும் மிகப்பெரும் வரவேற்பு எனக்கு பன்மடங்கு உற்சாகத்தை தந்திருக்கிறது. வட இந்திய பகுதிகளில் வாழும் மக்கள், நம் தமிழ் படங்களை வெகுவாக ரசிக்கிறார்கள். நம் படங்களில் உள்ள நேர்த்தியும், உணர்வூப்பூர்வமிக்க உறவுகளின் கதைகளும், அவர்களை பெரிதளவில் ஈர்க்கின்றன. எங்கள் “ப்ரேக்கிங் நியூஸ்” படத்தில் இவை அனைத்தும் அச்சு பிசகாமல் அட்டகாசமாக அமைந்துள்ளது. இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியனின் அற்புதமான உருவாக்கத்தில், “ப்ரேக்கிங் நியூஸ்” படம் உலக ரசிகர்கள் அனைவரையும் ஈர்க்கும், அதிரடியான திரைக்கதையில், வெகு நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக்கதை ஒரு திரில் பயணமாக மூளைக்கு வேலை தரும் திரைக்கதையில் அமைக்கப்பட்டிருந்தாலும், உணர்வுகளையும் சரியாக சொல்லும் வகையில் அமைந்துள்ளது. இப்படத்தின் 80 சதவீத காட்சிகள் விஷுவல் எஃபெக்ட்ஸ் தன்மையுடன் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து ரசிகர்களையும் ஈர்க்கும்படியான, பல ஆச்சர்யங்கள் கொண்ட கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகி வருகிறது. நடிகர் ஜெய்யின் கடின உழைப்பும்,அர்ப்பணிப்பும் இப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளிலும் மிளிரும். பட வெளியீட்டிற்கு முன்பே வெற்றிக்கு அடையாளமாய் ஹிந்தி ரைட்ஸ் பெரும் விலைக்கு விற்கப்பட்டது படக்குழு அனைவருக்கும் பெரிய உற்சாகத்தை தந்திருக்கிறது. இப்படம் கண்டிப்பாக அனைவரையும். தற்போது படப்பிடிப்பு முடிந்து, இப்படத்தின் போஸ்ட் புரடக்ஷன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. கவரும் படத்தை வருகிற 2020 மே மாதம் வெளியிட திட்டமிட்டு வருகிறோம் என்றார்.
இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் எழுதி இயக்கும் “ப்ரேக்கிங் நியூஸ்” தமிழில் முதல் முறையாக வித்தியாசமான சூப்பர்ஹீரோ வகை படமாக உருவாகியுள்ளது. “வேதாளம்” புகழ் ராகுல் தேவ், “சுறா” புகழ் தேவ் கில் ஆகிய இருவரும் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்கள். பழ கருப்பையா, இந்திரஜா, மானஸ்வி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். பானு ஶ்ரீ நாயகன் ஜெய் மனைவியாக, இப்படத்தின் நாயகியாக நடிக்கிறார். விஷால் பீட்டர் இசையமைக்க, ஜானி லால் ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி இப்படத்திற்கு படத்தொகுப்பு செய்கிறார். கிட்டதட்ட 400 தொழில் நுட்ப கலைஞரகள் தினேஷ் குமார் மேற்பார்வையில் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிளை வடிவமைத்து வருகிறார்கள். N M மகேஷ் கலை இயக்கம் செய்ய, ராதிகா நடன அமைப்பை செய்துள்ளார். சண்டைப்பயிற்சி இயக்குநராக ஸ்டன்னர் சாம் பணியாற்ற, தேனி சீனு புகைப்படங்கள் எடுத்துள்ளார்.