குஷ்பூ டிவிட்டர் கணக்கு ஹேக் செய்ய முயற்சி..
நடிகையும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பூ டிவிட்டரில் தனது கருத்துக்களை வெளிப் படுத்தி வருகிறார். பிரதமர் மோடியின் நடவடிக்கைகளை அடிக்கடி விமர்சித்து வந்தார்
சென்ற 3 நாட்களாக டிவிட்டரில் மெசேஜ் பதிவிட முடியாமல் இருக்கிறார் குஷ்பூ.
இதுபற்றி குஷ்பூ இன்ஸ்டா கிராம் பக்கத்தில், ‘3 நாட்களாக என்னுடைய டிவிட்டர் கணக்கில் மெசேஜ் பதிவிட முடியவில்லை. வெவ்வேறு பகுதியிலி ருந்து 3 முறை என் டிவிட்டர் கணக்கை ஹேக் செய்ய முயன்றுள்ளனர். என்னுடைய பாஸ்வேர்டையும் மாற்ற முடியவில்லை.
டிவிட்டரும் நிறுவனமும் சரியானபடி உதவவில்லை. என் கணக்கை எப்படி மீட்பது பற்றி உங்கள் யாருக்காவது தெரிந்தால் உதவுங்கள். அதற்காக எனது நன்றிகள்’ என குறிப்பிட்டுள் ளார் குஷ்பூ.
#Actress Kushboo Twitter Hacked
#குஷ்பூ டிவிட்டரில் ஊடுருவல்