1 லட்சம் கொரோனா சோதனை கருவிகள்..
முதல்வர் அறிவிப்பு
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக் கைகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட ஆட்சியா்களுடன் வீடியோ காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்..
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் கூறியதாவது:
கொரோனா வைரஸ் தொற்று வீரியம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தடுப்புப் பணிகள் வேகமாக நடக்கிறது. 2 லட்சத்து 10 ஆயிரத்து 538 விமான பயணிகள் இதுவரை பரிசோதனை கப்பட்டுள் ளனர். மேலும் 21 இடங்களில் தமிழகத்தில் பரிசோதனை மேற்கொள்ள அனுமதி கேட்கப்பட்டுள் ளது.
30 நிமிடங்களில் பரிசோதனை செய்யும் வகையில் ஒரு லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கப்பட உள்ளன. 3,371 வென்டிலேட்டர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை களில் உள்ளன. சென்னை மாநகரில் நடமாடும் காய்கறிக் கடைகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. அதேபோல் அத்தியாவசியப் பொருட்களும் முடிந்த அளவு வீடுகளுக்கே சென்று வழங்க மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை மேற்கொள்ள கூறப்பட்டிருக்கின்றன.
இவ்வாறு முதல்வர் கூறினார்.
#COVID-19: Tamil Nadu has placed orders for 1 lakh rapid test kits