கமலுக்கு கேரளா போலீஸ் நன்றி..
இந்தியா முழுவதும் கொரோ கொரோனா பாதிப்பு மும்முரமாக உள்ளது. கேரளாவில் பரவி வரும் தொற்றை சமாளிக்க அரசும் சுகாதார துறையும் அவர்களுக்கு உதவியாக போலீசும் கடுமையாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கேரள டிஜிபி உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் கொரோனா பாடல் வீடியோ வெளி யிட்டுள்ளனர். அதனை நடிகர், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டியிருப்பதுடன் பெரிய சல்யூட் ஒன்றும் தெரிவித்து மெசேஜ் அனுப்பினார்.
கமலின் பாராட்டு போலீசாரை நெகிழ வைத்தது. இதையடுத்து கேரளா போலீஸார் கமலுக்கு நன்றி தெரிவித்து பதில் மெசேஜ் அனுப்பி இருக்கின்றனர்.
#kamalhaasan Salute To Kerla Police
#கமல்ஹாசன்
#கேரள போலீஸ்