ஏப்ரல் 7ம் தேதி வீடு தேடி ஆயிரம் ரூபாய் வரும்..
அரசு தரும் கொரோனா நிவாரணம்..
..
தமிழக அரசு ஏற்பாடு.
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊடரங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழக அரசு அரிசி குடும்ப அட்டைதாரா் களுக்கு ரேஷன் மூலம் தலா ரூ.1,000 மற்றும் உணவுப் பொருள்கள் வழங்க முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டி ருக்கிறார்.
ஆயிரம் மற்றும் ரேஷன் பொருட்கள் பெற ரேஷன் கடைகளில் கூட்டம் சேர்ந்தது. அதை தவிர்க்கும் வகையில் தற்போது நேரடியாக வீடுளுக்கு சென்று டோக்கன் வழங்கும் போதே 1000 ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி இன்று காலை தெரிவித்தார்.
வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் வீடு, வீடாகச் சென்று ரூ.1000 வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே டோக்கன் வாங்கியவர்களுக்கு நாளை ரேஷன் கடைகளில் வழங்கப் படும்.
#Corona vairus relief fund Rs 1000 will directly distribute to each Home
#Chief Minister Edappadi Pazhaniswami
#Tamil Nadu Gives 1000 Rupees to Rice Card Holder
#தமிழ்நாடு அரசு 1000ரூபாய் கொரோனா நிவாரணம்