படம்: இந்தநிலை மாறும்
நடிப்பு: ராம்குமார், சாம்ஸ், ஒய்.ஜி.மகேந்திரன், சந்தானபாரதி, டெல்லி கணேஷ்.
தயாரிப்பு: பந்தாலம் சினிமாஸ் அண்ட் விஜி
இசை: அருண்காந்த்
ஒளிப்பதிவு: சுகுமாரன் சுந்தர்
இயக்கம்: அருண்காந்த்
ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் நண்பர்கள் ராம்குமார், சுதர்ஷன் அந்த வேலையை விட்டுவிட்டு சொந்தமாக தொழில் செய்ய முடிவு செய்கின்றனர். நண்பன் அஷ்வின்குமார், சாம்ஸ் உதவியுடன் நிவேதா சதீஷுடன் இணைந்து இன்டர்நெட் ரேடியோ தொடங்குகின்றார்கள். திருமணத்துக்கு மணமகன் தேடும் பட்டியலை தேடிப்பிடித்து அவரது தந்தையை கலாய்த்து பரபரப்பு ஏற்படுத்துகின்றனர். இதனால் அவர்கள் மீது வழக்கு வருகிறது. கோர்ட்டுக்கு வழக்கு சொல்ல எதிர்தரப்பில் சீனியர் அட்வகேட் ஒய்.ஜி.மகேந்திரன் வாதாடுகிறார். சேட்டிலைட் ரேடியோவுக்கு தடை விதிக்க மகேந்திரன் வாதம் எடுத்து வைக்கிறார். அதற்கு ராம்குமார் தரப்பு பதில் அளிக்கிறது. கடைசியில் ஜெயிப்பது யார் என்பதற்கு பதில் சொல்கிறது படம்.
சினிமா என்ற செயற்கை தனத்திலிருந்து மாறி முற்றிலும் யதார்த்த பேச்சு, நடைமுறை காட்சிகள் என படம் நகர்கிறது. முதல் சில காட்சிகள் எந்த தளத் தை நோக்கி கதை செல்கிறது என்பது புரியாமல் குழப்பம் ஏற்படுகிறது. இடைவேளை நெருங்கும் வேளையில் இது திருமணத்துக்கு மணமகனை தேடுபவர்கள் விதிக்கும் கண்டிஷனை நய்யாண்டி செய்யும் கதை என்பது தெளிவாகிறது. இடை வேளைக்கு பிறகு வில்லத்தன மான வக்கீலாக என்ட்ரி தருகிறார் ஒய்.ஜி.மகேந்திரன். தனது பி.ஏ தரும் அட்வைஸை உதாசீனப்படுத்தி வாயை அடைக்கும்பது, பின்னர் அவரது வீட்டுக்கு சென்று அடாவடித் தனம் செய்வது என தாதா வேலைகளையும் செய்து கதாபாத்திரத்தின் சைக்கோ தனத்தை வெளிப்படுத்துகிறார். நகைச்சுவை வேடங்களிலேயே ஒய்.ஜி.மகேந்திரன பார்த்தி ருப்பதாலும் வில்லத்தனத்தை உடல்மொழியிலும் சைகை யிலும் காட்டி இருப்பது மிரட்டல் தான் ஏற்படுத்துகிறார்
ரேடியோ ஜாக்கியாக வரும் சாம்ஸ் பலவித சேட்டைகள் செய்கிறார் . நீதிபதிக்கு டெல்லி கணேஷ் பொருத்தமான தேர்வு. விசாரணை நடக்கும் நிலையில் அவ்வப்போது ஓய்.ஜி.மகேந்திர னை கலாய்பது ரசனை.
திருமண ஏற்பாட்டு நிறுவனங் கள் குறித்து சொல்லியிருப்ப தோடு திருமணம் மற்றும் பெண் வீட்டாரின் எதிர்ப்பார்ப்புகள் குறித்தும் விமர்சனம் செய்திருக்கிறார் இயக்குனர். இவர்களின் பேராசை சில சமயம் பெண்ணுக்கு ஆபத்தில் முடிகிறது என்ற மெஸேஜையும் சேர்த்திருந்தால் பிளஸ் ஆக இருந்திருக்கும். விவசாயி, இராணுவ வீரர்களுக்கு பெண் தர மறுப்பவர்களை வெளுத்து வாங்கும் இயக்குனர் மாப்பிள்ளையின் சம்பாத்தியத் தை வைத்து பெண் கொடுக்கும் சிலரின் பேராசையையும் டச் செய்திருக்கிறார் இயக்குனர்.
இண்டோர் படப்பிடிப்பே அதிகம் என்பதால் ஒளிப்பதிவாளர் சுகுமாரன் சுந்தர் நான்கு சுவர் களுக்குள் கேமராவை சுழல விட்டிருக்கிறார்.
கதை, இயக்கம், இசை, பாடல், எடிட்டிங், ஆர்ட் டைரக்ஷன் ஆகிய பொறுப்புகளை அருண் காந்த் ஏற்றிருக்கிறார்.
இந்தநிலை மாறும்- டைட்டிலுக்கு ஏற்ற மாற்றத்தை தருமா?