அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மின் கட்டணம் ரத்து செய்க..
மு.க.ஸ்டாலின் கோரிக்கை..
திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க் கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
கொரோனா தொற்றுக் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்திலும் ஊரடங்கு கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் விதி விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ஊரடங்கு காரணமாக அனைத்து தொழிலும் பாதிக்கப்பட்டிருப்பதால் மக்கள் வேலை இன்றி வருமான மின்றி கஷ்டப்பட்டு வருகின்றனர். அதனால் மக்கள் படும் அவதிகள் பற்றி திமுக தலைவர் மு க ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தொடர் ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் வாழ்வாதாரத்தையும் வாழ்க்கையையும் இழந்து நிற்கும் ஏழை எளிய மக்களும் அமைப்புசாரா தொழிலாளர்களும் தங்களின் ஒரு வேளை உணவிற்கு கூட அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள் திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நிவாரண உதவிகளை ஆங்காங்கே அளித்து வந்தாலும் வறுமையின் கோரப்பிடியில் சிக்கி உள்ள மக்களுக்கு மேலும் தேவையான நிவாரணத்தை வழங்கிட வேண்டிய மிக முக்கியமான கடமையும் பொறுப்பும் அரசுக்கு இருக்கிறது. இந்த சூழ்நிலையில் மலிவு விலையில் உணவு வழங்கும் அம்மா உணவகங் களை ஆளும்கடசியினருக்கு மட்டும் குத்தகைக்கு விட்டதுபோல் தாரை வார்ப்பது நிச்சயமாக ஏற்புடையதல்ல. அரசு மானியத்தில் நடத்தப்படும் அம்மா உணவகங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிமுகவினரின் கைகளில் ஒப்படைத்து இருப்பது மிகவும் மோசமான அரசியல் என்றாலும் இப்போதைக்கு அதற்குள் செல்ல நான் விரும்ப வில்லை. அம்மா உணவகங் களை வைத்து அரசியல் செய்யாமல் தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களுக்கு வருவோர் அனைவருக்கும் அரசே இலவசமாக உணவு வழங்குவதே இந்த நேரத்தில் இன்னல்களுக்கு உள்ளாகி இருப்போ ருக்கு இதயபூர்வமாக ஆற்றும் பணி ஆகும்
கொரோனா நோய்களைத் தடுப்பதிலும் சுகாதார பணிகளிலும் சுற்றுப்புற சூழலின் நோயின் தாக்கத்தி லிருந்து பாதுகாத்து தூய்மையாக வைத்திருப்ப திலும் முக்கிய பங்காற்றியவர்கள் தூய்மைப் பணியாளர்கள். ஒரு மாத சம்பளம் கொடுக்கவில்லை என்று கரூர் அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப் பட்டு இருப்பது பரிதாபத்துக் குரியது. ஊதியம் கொடுப்பது தாமதம் செய்வது உயிரை பணயம் வைத்து பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களின் உழைப்பை மதித்து போற்று வதாகாது. கரூரில் மட்டும் இந்த நிலைமையா? அல்லது மாநிலம் முழுவதுமே இந்த அவலமா என்பதை அரசு உடனே கவனித்து பணியில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்குவது அவர்கள் ஆற்றும் மகத்தான பணிக்கு நன்றிக்கடன் செலுத்துவ தாக அமையும்.
செய்தி சேகரித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் பத்திரிகையாளர்கள் பலருக்கும் நோய் வந்திருக்கிறது என்று வெளி வந்துள்ள தகவல் எனக்கு மிகுந்த மனவேதனையைத் தருகிறது. களத்தில் நின்று மக்களின் கண்ணீரில் குரல்களை எதிரொலித்து வரும் அவர்களுக்கு இந்த நோயின் தாக்குதல் என்று கலங்கி நிற்பதை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டி ருக்கக் கூடாது அனைத்து பத்திரிக்கை யாளர்களுக்கும் போர்க்கால அடிப்படை யில் பரிசோதனை செய்வதும் அரசு உள்ளிட்ட அனைவருமே ஊரடங்கு முடியும்வரை பத்திரிக்கையாளர் சந்திப்பு தவிர்த்து செய்திகளை மின்னஞ்சல் மூலம் சம்பந்தப்பட்ட பத்திரிகைகளுக்கு அனுப்புவது மிக முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கையாகும்.
ஊரடங்கில் சிக்கி குறைந்தபட்ச வருமானமே இல்லாமல் வீட்டிற்குள் முடங்கிக் கிடப்பவர்கள் மின்சார கட்டணத்தை செலுத்த இயலாது
ஆகவே அரிசி பெறும் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் மின்சார கட்டண தள்ளுபடி செய்வது ஒன்றே அவர்களுக்கு அரசு நீட்டும் நேச கரமாக இருக்கும்.
ஆகவே அம்மா உணவகங்களில் இலவச உணவு தூய்மைப் பணியாளருக்கு சம்பளம் பத்திரிகையா ளர்களுக்கு பரிசோதனை, மின்சார கட்டணம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறை வேற்றிட அதிமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் எமர்ஜென்சி தேவைகளுக் காகவும் மட்டுமே போக்குவரத்து அனுமதிப் அனுமதிக்கப்படுகின்றன இந்த நெருக் கடியில் சுங்கச்சாவடி களை திறந்துவிட்டு அங்கு சுங்க கட்டணத்தை உயர்த்தி வசூல் செய்வது எந்த விதத்திலும் மனிதநேயமற்ற இதயத்தில் ஈரம் இல்லாத செயல் ஆகும். இந்த கெடுபிடிகள் மளிகை சாமான்கள் மற்றும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்திற்கு வித்திடும். ஆகவே சுங்க கட்டண வசூலை உடனடியாக மத்திய அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துவதுடன் பேரிடர் காலத்தில் மக்களின் துயரத்தை துடைப்பதும் அதில் பங்கு எடுத்துக் கொள்வதும் மக்கள் நலன் காக்கும் பணிகள் செய் வோரை பாதுகாப்பதுதான் ஒரு அரசின் தலையாய கடமை என்பதை மத்திய மாநில அரசுகள் உணர்ந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
#Quash electric charges for rice card holder :MK.Stalin