Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

தலைக்கூத்தல் (பட விமர்சனம்)

படம்: தலைக்கூத்தல்

நடிப்பு: சமுத்திரக்கனி, வசுந்தரா, கதிர், கலைச் செல்வன், கத்தா நந்தி, வையாபுரி

தயாரிப்பு: ஒய்நாட் ஸ்டுடியோ சசிகாந்த்

இசை: கண்ணன் நாராயணன்

ஒளிப்பதிவு: மார்ட்டின் டான் ராஜ்

இயக்கம்: ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்

பி ஆர் ஒ: நிகில் முருகன்

 

செக்யூரிட்டியாக வேலை பார்க்கும் சமுத்திரக்கனி மனைவி வசுந்தரா . இவர்களுக்கு ஒரு மகள். சமுத்திரக்கனியின் தந்தை உடல்நலமமின்றி படுத்தபடுக்கையாகி விடுகிறார். குடும்ப பாரம் ஒருபக்கம் இருந்தாலும் தந்தை மீதான பாசம் குறையாத சமுத்திரக் கனி அவருக்கு பணிவிடை செய்வதுடன் சிகிச்சைக்கு வீட்டை அடமானம் வைத்து செலவு செய்கிறார. பணத்தை திருப்பி கொடுக்க முடியாத நிலையில் கடன்
கொடுத்தவர் வீட்டை விற்க முயல்கிறார். இது தெரிந்ததும் சமுத்திரக் கனியிடம் சண்டை போடும் வசுந்தரா அவரை பிரிந்து செல்கி றார். அவரிடம் சமானதானம் பேச வரும் வசுந்தரா குடும்பத்தினர், உயிருக்கு போராடும் அவரது தந்தையை தலைக்கூத்தல் முறையில் கொல்லச் சொல்கின்றனர். அதற்கு சமுத்திரக்கனி சம்மதிக்க மறுக்கிறார் ஒரு கட்டத்தில் எப்படி யாவது செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு வீட்டிலிருந்து செல்கி றார். அதன் பிறகு நடந்தது என்ன என்ப தற்கு உருக்கமாக பதில் அளிக்கிறது கிளை மாக்ஸ்.

இது வழக்கமான ஒரு படம் என்பதைவிட கிராமத்து பக்கம் இன்றளவிலும் நடக்கும் ஒரு கருணை கொலை என்றுதான் சொல்ல வேண்டும் . கள்ளிப்பால் ஊற்றி பெண் சிசுக்களை கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது அப்படியொரு கொடுமைதான் தலைக்கூத்தல் முறையில் நடக்கும் கொலைகளும். இதை தடுக்க சட்டம் இருக்கிறதா என்று கூட தெரியவில்லை.

இப்படியொரு சம்பவத்தை வெளி உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியிருக்கும் இயக்குனர் அதற்கு ஒப்புக்கொண்ட சமுத்திரக்கனி இருவரும் ஒரு அக்கிரமத்தை தோலுரித்திருக்கின்றனர்.
சாமுத்ரக்கனியின்
தந்தைக்கு தலைக் கூத்தல் நடத்தி அவரது மூச்சை நிறுத்த மனைவி வசுந்தராவும் அவரது குடும்பத்தினர் வற்புறுத்தும் போது அதுவும் ஒரு உசிரு தானே என்று சமுத் திரக்கனி சொல்லும் போது நெஞ்சு கனக்கிறது.

வசுந்தரா இயல்பான ஒரு சராசரி குடும்ப பெண்ணாக நடித்திருக் கிறார். தந்தைக்கு தலைக்கூத்தல் நடத்தும்படி சமுத்திரக் கனியிடம் அவர் உறவினர்களை அழைத்து வந்து வற்புறுத்தும்போது கோபப்பட வைக்கிறார்.

படுத்துக்கொண்டே மூச்சை அடக்கி நடித்தி ருக்கும் கலைச்செல்வன் சினிமா மீது வைத்தி ருக்கும் ஆர்வத்துக்காக எதையும் செய்வேன் என்பதுபோல் வாழ்ந்தி ருக்கிறார். சாமியார் வேடத்தில் வரும் வையாபுரி தனது நடிப்பால் ஆச்சரிப்பட வைக்கிறார்.
இளவயது சமுத்திரக் கனிக்கு தந்தையாக நடித்திருக்கும் கதிர் அவரைவிட வயதில் மிகவும் குறைந்தவர் ஆனாலும் ஒப்புக் கொள்ளும்படி நடிப்பை வெளிப்படுத்தியிருக் கிறார்.

கதிர் காதலியாக வரும் கத்தா நந்தி கண்களால் வலை வீசி கவர்கிறார். அவருடன் கதிருக்கு ஒரு. லிப் டூ லிப் காட்சி தேவை யற்ற இணைப்பு.

தந்தை மகன் பாசத்தை ஒருபக்கம் எடுத்துக் கூறும் இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதா கிருஷ்ணன் உயிர் போகும் நிலையில் இருக்கும் ஒரு உசிரு தன் இளமை கால நினைவு களை அசைபோடு வதுப்போன்ற கற்பனையை அமைத் திருப்பதும் அதை கிளைமாக்சில் காதலியின் சென்டி மென்ட் டச்சுடன் இணைத்திருப்பதும் சபாஷ் பெறுகிறது.

பெரிய செலவில் ஆக்ஷ்ன் படங்கள்
தயாரிக்கும்போது லாபம் கிடைக்கும் இதுபோல் மண் சார்ந்த படங்களை தயாரிக்கும் போது ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கும். அது நிச்சயம் தயாரிப்பாளர் சசிகாந்துக்கு கிடைத்தி ருக்கும்.

இசை அமைப்பாளர் கண்ணன் நாராயணன் பாடல்களை மனதில் பதிய வைப்பதுபோல் அந்த பெரியவரின் உயிர் மூச்சின் வலியையும் புரிய வைத்திருக்கிறார்.

அப்பட்டமான கிராமத்து மண்ணை படம் முழுவதும் பரவச் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மார்ட்டின் டான் ராஜ்.

ஏற்கனவே இரண்டு படங்கள் இந்த சம்பவத்தை கொண்டு வந்திருந்தாலும் அதில் இல்லாத ஒரு ஜீவன் காதலுடன் இதில் உலாவருகிறது.

தலைக்கூத்தல் – மனம் கனக்கும்.
mmmmm

Related posts

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வாழை அக் 11 முதல் வெளியீடு

Jai Chandran

மனிதாபிமானத்துக்காக நடிகர் பாலாவுக்கு கிடைத்த டாக்டர் பட்டம்

Jai Chandran

குணச்சித்திர நடிகர் அமர சிகாமணி மாரடைப்பால் காலமானார்.

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend