அத்தியாவசிய பொருள் வாங்க நேரம் குறைப்பு..
காலை 6மணி முதல் 1 மணி வரை அனுமதி..
இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்ப தால் யாரும் வீட்டிலிருந்து வெளியில் வரக்கூடாது. அத்தியவசிய பொருட்கள் வாங்க புதிய காலநேரத் தை தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி முன்பிருந்த நேரம் குறைக்கப் படுகிறது.
காலை 6 மணியில் இருந்து மதியம் 2.30 மணிவரை இருக்கும் என்று இதுவரை அனுமதிக்கப்பட்டது தற்போது அவகாசம் குறைக்கப்பட்டு உள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், பொதுமக்கள் காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணி வரை தங்களுக்கு தேவையான அத்தியா வசிய பொருட்களை வாங்கி கொள்ள லாம் என அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
அத்தியாவசிய பொருட்களை வாங்க வரும்போது சமூக இடைவெளியை பின் பற்ற வேண்டும். அரசின் விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Time Reduce To Consume Home Need
#Tamilnadu Government New Order for Consumers