Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பிரமாண்டத்தின் உச்சம்: ஜீ5 வெளியிட்ட வலிமை 10 ஆயிரம் அடி போஸ்டர்

Jiiபிரமாண்டத்தின் உச்சம் !!! அஜித்குமாரின் ‘வலிமை’ படத்திற்காக ஜீ5 நிறுவனம் 10000 சதுர அடியில் போஸ்டரை வெளியிட்டது.

இந்தியாவில் வெளியான போஸ்டர்களில் இது உட்ச பட்ச சாதனை ஆகும்.

தமிழ் ஓடிடி இயங்குதளங்களில் மறுக்கமுடியாத வெற்றியாளராக, தன்னை நிரூபித்துள்ள ஜீ5 நிறுவனம், தொடர்ந்து பல மொழிகளில் அருமையான திரைப்படங்களையும் அசல் தொடர்களையும் வழங்கி வருகிறது. இதன் சந்தாதாரர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களுக்கு ஒவ்வொரு மாதமும் புதிய உள்ளடக்கத்துடன் கூடிய சிறப்பு மிகு படைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்போது, அஜித் குமாரின் சமீபத்திய ஆக்‌ஷன் அதிரடி திரைப்படமான ‘வலிமை’ படத்தின் உலகளாவிய டிஜிட்டல் பிளாக்பஸ்டர் பிரீமியர் காட்சியைக் காணும் நேரம் வந்துவிட்டது.

‘வலிமை’ படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாவதை தொடர்ந்து, நடிகர் அஜித்குமாருக்கு சிறப்பு செய்யும் வகையில் ஜீ5, 10,000 சதுர அடியில் மிகப்பெரிய போஸ்டரை வெளியிட்டது. உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்ற பிறகு, ‘வலிமை’ திரைப்படம் மார்ச் 25 முதல் உலகம் முழுவதும் ஜீ5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது. இதனை சிறப்பிக்கும் வகையில் ஜீ5 ஏற்பாடு செய்திருந்த இந்த போஸ்டர் வெளியீட்டு நிகழ்வில், பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகங்கள் மற்றும் ஜீ5 ஸ்டுடியோ குழுவினர் சென்னையில் உள்ள YMCA அரங்கில் கலந்து கொண்டனர்.

2022 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாக கருதப்படும் வலிமை படத்தில் அஜித் குமார் ஐபிஎஸ் அதிகாரி அர்ஜூனாகவும், ஹுமா குரேஷி நாயகியாகவும் நடித்துள்ளனர். ஒரு அருமையான போலீஸ் கதையோடு, வலுவான ஆக்‌ஷன் மற்றும் உணர்வுபூர்வமான காட்சிகள் இந்தப் படத்தை ஒரு முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக மாற்றியுள்ளது. இப்படத்தில் நடிகர் அஜீத் குமாரின் அசத்தலான திரை ஆளுமை மற்றும் நடிகர் கார்த்திகேயாவின் சாத்தானிய அவதாரம் ஆகியவை ஒட்டுமொத்த திரையரங்குகளையும் அதிர வைத்தது.

H.வினோத் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை, ஜீ ஸ்டுடியோஸுடன் இணைந்து பேவியூ ப்ராஜெக்ட் எல் எல் பி சார்பில் போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படத்தில் ஹுமா குரேஷி மற்றும் கார்த்திகேயா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

12 மொழிகளில் 3,500 திரைப்படங்கள், 500+ தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், 4,000+ இசை வீடியோக்கள், 35+ மேடை நாடகங்கள் மற்றும் 90+ லைவ் டிவி சேனல்கள், உடன் ஜீ5 தளமானது உலகம் முழுவதும் உள்ள அதன் பார்வையாளர்களுக்கு நிகரற்ற உள்ளடக்கத்தை வழங்குகிறது. இப்போது, ஜீ5 ஆண்டு சந்தா ரூ. சிறப்பு விலையில் கிடைக்கிறது. 599/- மட்டுமே!

Related posts

உலக கோப்பை கிரிக்கெட்டில் உறுமும் ‘டைகர்’

Jai Chandran

யுவன் வெளியிட்ட “எண்ணம் போல் வாழ்க்கை.” இசை ஆல்பம் யூ டியூப்பில் டிரெண்டிங்

Jai Chandran

மார்ச்-13ல் திரைக்கு வரும் ‘போலீஸ் ஃபேமிலி’*

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend