Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஜோ படத்துக்கு யுவன் சங்கர் ராஜா கோல்டன் டச்

ரியோ ராஜின் ‘ஜோ’ படத்தில் ‘சில்லா சில்லா’ புகழ் வைசாக் எழுதியுள்ள ‘ஒரே கனா’ பாடலில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தோன்றி யுள்ளது படத்திற்கு கோல்டன் டச் கொடுத் துள்ளது!

ரியோ ராஜ் நடித்துள்ள ’ஜோ’ திரைப்படம் அதன் அறிவிப்பில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான வைப்பை உருவாக்கி வருகிறது. வண்ணமயமான மற்றும் நேர்த்தியாக வழங்கப்பட்ட இதன் விஷூவல் புரோமோவான ‘உருகி உருகி’ என்ற டிராக் அனை வரையும் ‘ஜோ’வின் உலகிற்குள் அழைத்து சென்றது. படத்திற்கான புரோமோஷனல் பாடலாக மியூசிக்கல் ஜீனியஸ் யுவன் ஷங்கர் ராஜா திரையில் தோன்றும் பாடல் குறித்தான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. நவம்பர் 24ஆம் தேதி உலகம் முழுவதும் திரை யரங்குகளில் வெளி யாகும் இந்தப் படத்திற் கான எதிர்பார்ப்பை இது கூட்டுவதாக அமைந் துள்ளது.

இன்னொரு இசையமைப் பாளர் பாடலில் யுவன் ஷங்கர் ராஜா தோன்று வது இதுவே முதல்முறை. அஜித் குமாரின் ’துணிவு’ படத்தில் ‘சில்லா சில்லா’ என்ற சார்ட் பஸ்டர் ஹிட் பாடலை எழுதிய வைசாக் இந்த ‘ஒரே கனா’ பாடலை எழுதியுள்ளார். ‘அடிபொலி’ என்ற இண்டி பாடல், ’பேச்சுலர்’ படத்தில் இருந்து ‘அடியே’ மற்றும் இந்த படத்தில் இருந்து ‘உருகி உருகி’ போன்ற பெப்பி பாடல்களை கொடுத்த சித்து குமார் தான் இந்த ‘ஒரே கனா’ பாடலுக்கு இசையமைத் துள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா போன்ற ஒரு மியூசிக்கல் லெஜெண்ட் தங்களது படத்தில் இருப்பது படத்தின் எதிர்ப்பார்ப் பையும் மதிப்பையும் உயர்த்தும் என்று ‘ஜோ’ படக்குழுவினர் மகிழ்ச்சி யடைந்துள்ளனர். ‘ஜோ’ ஒரு ஃபீல்-குட் ரொமாண்டிக் என்டர் டெய்னர் திரைப்படம். இந்தப் படத்தை ஹரிஹரன் ராம்.எஸ் எழுதி இயக்கியுள்ளார் மற்றும் விஷன் சினிமா ஹவுஸின் டாக்டர். டி.அருளானந்து & மேத்வோ அருளானந்து தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தில் ரியோ ராஜ் & பவ்யா திரிகா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சித்து குமார் இசையமைக்க, ராகுல் கே.ஜி.விக்னேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வருண் கே.ஜி. (எடிட்டிங்), ஏபிஆர் (கலை), அபு & சால்ஸ் (கோரியோ கிராஃபி), பவர் பாண்டி யன் (ஆக்‌ஷன்), வைசாக், விக்னேஷ் ராமகிருஷ்ணா (பாடல் வரிகள்), ஸ்ரீதேவி கோபாலகிருஷ்ணன் (ஆடை வடிவமைப்பாளர்), எம். முகமது சுபியர் (காஸ்ட்யூமர்) மற்றும் சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன் (மக்கள் தொடர்பு) ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர். ‘ஜோ’ திரைப்படம் உலகம் முழுவதும் நவம்பர் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளது.

Related posts

ரெண்டகம் ( பட விமர்சனம்)

Jai Chandran

பிரியங்காவுக்கு முத்தம் பற்றி அர்த்தம் சொன்ன ஶ்ரீகாந்த்

Jai Chandran

கார்த்தியின் நடிப்புக்கு கிடைத்த பாராட்டு எனக்கு பெருமை – அரவிந்த்சாமி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend