நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அடுத்து அதிக இடத்தில் அதிமுக வெற்றி பெற்று எதிர்கட்சியாக இடம்பிடித்திருக்கிறது.
அதிமுகவின் எதிர்கட்சி தலைவராக யார் தேர்வு ஆவதுஎன்பதில் கடந்த சில தினக்களாக குழப்பம் நிலைவியது. எடப்பாடி பழனிசாமி தரப்பு அவரையே எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்தார். எதிர்கட்சி தலைவராக தன்னை தேர்வு செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார். இதனால் இருதரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையே கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
இறுதியாக இன்று நடந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி சட்டபேரவை எதிர்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.