படம்: யாரோ
நடிப்பு: வெங்கட் ரெட்டி, உபசன்னா ஆர்.சி., சி.என்.பாலா
தயாரிப்பு: வெங்கட் ரெட்டி
இசை:ஜோஸ் ப்ராங்க்ளின்
ஒளிப்பதிவு: ராஜு முருகன்
இயக்கம்: சந்தீப் சாய்
பி.ஆர்.ஒ: சதீஷ் (AIM)
கட்டிட வடிவமைப்பாளர் வெங்கட் ரெட்டி தனியாக பங்களாவில் வசிக்கிறார். அடிக்கடி அவருக்கு மோட்டார் சைக்கிளில் செல்லும்போது யாரோ விபத்தில் சிக்கும் சம்பவம் கனவில் வருகிறது. இதுகுறித்து டாக்டரை சந்தித்து ஆலோசனை பெறுகிறார். இதற்கிடையில் அவர் தங்கியிருக்கும் பங்களாவில் பேய் இருப்பதாக பலர் கூற வெங்கட் அதிர்ச்சி அடைகிறார். இந்நிலையில் அவர் வீட்டுக்கு வரும் சாமியார் மாடியிலிருந்து விழுந்து சாகிறார். அவரது உடலை தோட்டத்தில் புதைக் கிறார். அந்த பங்களாவிற்கு வரும் போலீஸ் அதிகாரி சந்தேகப் பார்வை வீசுகிறார். வெங்கட்டை சிலர் தாக்க முயல்கின்றனர். இறுதியில் நடப்பது என்ன? வெங்கட் ரெட்டி கதி என்ன என்ற சஸ்பென் ஸுக்கு ஷாக் பதிலளிக்கிறது படம்.
பேய் படங்கள் சீஸன் இன்றும் நீடித்துக்கொண்டிருக்கும் நிலையில் பேய் கதை மற்றும் சைக்கோ கதை இரண்டையும் கலந்து இப்படத்தை இயக்கி இருக்கிறார் சந்தீப் சாய்.
ஹீரோ வெங்கட் ரெட்டி புதுமுகமாக அறிமுகமானாலும் தேர்ந்த நடிப்பை வெளியிட் டிருக்கிறார். வீட்டுக்கு வந்து பெங்கட்டிடம் தண்ணீர் கேட்பவர் திடீரென்று காணாமல் போனதும் இது பேய் சமாச்சார கதை என்ற திகிலை கிளப்பி விடுகிறார்கள்.
தண்ணீர் கேட்க வந்தவர் யார் என்பதை அறிய அவரது வீட்டடை கண்டுபிடித்து செல்லும் ஹீரோ, அந்த நபர் விபத்தில் இறந்துவிட்டதாக அவரது தந்தை சொன்னதும் பின்னர் அந்த விபத்து தன் காரில் நடப்பதை கண்டு அஞ்சுவதும் என்று காட்சிகள் முட்டி மோதிக்கொண்டு நடப்பதெல்லாம் நிஜமா, பொய்யா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி விடுகிறது.
வெங்கிட்டின் காதலியும் ஒரு கட்டத்தில் கற்பனை காதலி என்ற முடிச்சு அவிழும்போது மனம் திடுக்கிடுகிறது.
கிளைமாக்ஸை நெருங்கும் போது ஹீரோ வெங்கட் ரெட்டி ஒரு சைக்கோ என்ற அதிர்ச்சி அரங்கை அதிர வைக்கிறது.
வெங்கட் ரெட்டி தயாரித்தி ருக்கும இப்படத்தை விறுவிறுப்பு குறையாமல் இயக்கியிருக்கிறார் சந்தீப் சாய்.
ப்ராங்க்ளின் இசை பலம். ராஜூ முருகன் ஒளிப்பதிவு தெளிவான பிரதிபலிப்பு.
அனில் கிரிஷ் எடிட்டிங்கும் கதையின் சஸ்பென்சை கடைசிவரை கட்டிகாக்கிறது.
யாரோ – பக்கா சைக்கோ த்ரில்லர்.