அதேசமயம், தயாரிப்பாளர் S.R.பிரபுவும் இந்த கோடையில் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் இணைத்து இப்படத்தை பார்த்து ரசிக்கும்படி மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் தன் பக்கத்தில் எழுதியுள்ளதாவது – “#OhMyDog குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கு ஒரு சரியான கோடை விருந்தாக இருக்கும்!! அதை தவற விடாதீர்கள்!!” https://twitter.com/prabhu_sr/status/1517005717932191744?t=bbEjS1Ve5mhFMrQtyEznmg&s=19
இதனை தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் வீரர் பிரசாந்த் சோலங்கியும் படத்தைப் பார்ப்பதற்கான தனது எதிர்பார்ப்பை குறித்து எழுதினார் – “இந்த பாதங்களுக்கு குணப்படுத்தும் சக்தி உள்ளது ‘ஓ மை டாக்’ பார்க்க ஆவலாக உள்ளேன்!”
https://instagram.com/stories/prashanttsolanki/2821173010092932775?utm_source=ig_story_item_share&igshid=MDJmNzVkMjY=
‘ஓ மை டாக்’ படத்தினை ஜோதிகா-சூர்யா தயாரித்துள்ளனர், ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் மற்றும் S. R. ரமேஷ் பாபு RB டாக்கீஸ் சார்பில் இணை தயாரிப்பு செய்துள்ளனர். நிவாஸ் பிரசன்னா இசையமைத்துள்ளார், கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரைம் வீடியோ மற்றும் 2டி என்டர்டெயின்மென்ட் இடையேயான 4 பட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகி வருகிறது. பார்வையாளர்களுக்கு தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில் கிடைக்கிறது.

