Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

வெப்பன் (பட விமர்சனம்)

 

ப9டம்: வெப்பன்

நடிப்பு: சத்யராஜ், வசந்த் ரவி, ராஜீவ் மேனன், தான்யா ஹோப்,  ராஜு பிள்ளை, யாஷிகா ஆனந்த்,  மைம் கோபி, கனிகா, கஜராஜ்,  சையத் சுபன், பரத்வாஜ் ரங்கன், வேலு பிரபாகரன் மற்றும் பலர்

தயாரிப்பு:  மில்லியன் ஸ்டுடியோஸ்

இசை:  ஜிப்ரான்

ஒளிப்பதிவு: பிரபு ராகவ்

இயக்கம்: குகன் சென்னியப்பன்

பிஆர்ஓ: சுரேஷ் சந்திரா  அப்துல் எ நாசர்

தமிழில் ஹாலிவுட் பாணியில் படங்கள் வருவதில்லையே என்று ஏங்குபவர்களுக்கு விடை தரும் படமாக வந்திருக்கிறது வெப்பன். சூப்பர் மேன்கள் நிஜத்தில் வந்தால் என்ன நடக்கும் என்பதுதான் கதை.

சுதந்திர காலத்திற்கு முன்பு சுபாஷ் சந்திர போஸ் ஹிட்லரை சந்தித்து போராளிகளுக்கு சூப்பர் பவர் சக்தியை தரும் ஒரு சீரத்தை வாங்கி வர எண்ணும்போது அது பெரிய அழிவை இந்தியாவுக்கு தரும் என்பதால் வாங்காமல் வந்து விடுகிறார். ஆனால் போஸின் உதவியாளர் ஒருவர் அந்த சீரத்தை கடத்தி வந்து இந்தியாவில் ரகசிய இடத்தில் பதுக்கி வைக்கிறார். இதை அறிந்த ஹிட்லரின் ஆட்கள் அவரை சுட்டு கொல்ல விரைகின் றனர். இந்நிலையில் தான் எடுத்து வந்த சீரத்தை தன் மகன் உடலில் செலுத்தி விட்டு இறந்து விடுகிறார். அந்த மகன் பின்னாளில் சூப்பர் மேன் சக்தி பெற்று என்னவெல்லாம் செய்கி றார். அந்த சூப்பர் மேன்  ஃபார்முலாவை கைப்பற்ற பிளாக் சொசைட்டி என்ற அமைப்பு எப்படி களம் இறங்குகிறது என்பதை மையமாக வைத்து வெப்பன் உருவாகி உள்ளது.

இதுவரை சத்யராஜை பார்க்காத ஒரு கதாபாத்திரத்தில் இப்படத்தில் காண முடிகிறது . . சூப்பர் மேன் சக்தி கொண்டவராக நடித்திருக்கிறார். சூப்பர் மேன்களுக்கு ஆக்சன் காட்சியில் ஒரு பிளஸ் என்னவென்றால் நின்ற இடத்திலேயே விட்டலாச்சாரியா பாணியில் கையையும் கண்ணையும் அசைத்து ஆக்சன் காட்சிகளை செய்து முடித்து விடலாம்.  அதைத்தான் சத்யராஜ் செய்திருக்கிறார். எல்லா காட்சிகளும் கிராபிக்ஸ் ஜிமிக்ஸ் ஆக உள்ளன.

வசந்த் ரவி இன்னொரு சூப்பர் மேன் என்ற விஷயம் தெரிய வரும்போது அதிர்ச்சியான இன்னொரு சஸ்பென்சையும் உடைத்து இருக்கிறார் இயக்குனர்.  ஜெய்லர் படத்துக்கு பிறகு வசந்த் ரவிக்கு இப்படமும் ஒரு பெயரை பெற்று தரும்.

படங்களை இயக்கிக் கொண்டு இருந்த ராஜிவ் மேனன் இப்படத்தில் வில்லன் வேடம் போடடிருக்கிறார். பிளாக் சொசைட்டி என்ற தீவிரவாத அமைப்பின் தலைவராக வந்து அவர் அசத்தலான நடிப்பை வழங்கியிருக்கிறார்..

இன்னும் தான்யா ஹோப்,  ராஜு பிள்ளை, யாஷிகா ஆனந்த்,  மைம் கோபி, கனிகா, கஜராஜ்,  சையத் சுபன், பரத்வாஜ் ரங்கன், வேலு பிரபாகரன் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக் கின்றனர்.

மில்லியன் ஸ்டுடியோஸ்  படத்தை தயாரித்து இருக்கிறது. ஹாலிவுட் பட பாணி டெக்னிக்குகளை துல்லியமாக அறிந்து வைத்திருக்கும் இயக்குனர் குகன் சென்னியப்பன் அதை காட்சிதமாக வெப்பன் படத்திற்கு பயன்படுத்தி இருக்கிறார். அவரது கற்பனை களுக்கு கிராபிக்ஸ் டெக்னிஷன்கள் முழு உருவம் கொடுத்திருக்கிறார்கள்.

கதாபாத்திரங்கள் எல்லாம் ஹாலிவுட் பாணியில் சித்தரிக்கப்பட்டிருப்பதால் அதை புரிந்து கொள்வதில் சிலருக்கு சிரமம் இருக்கும்.

ஜிப்ரான் இசை அதிரடி காட்டுகிறது.

வெப்பன் – ஹாலிவுட் பிளஸ் விட்டலாச்சாரியா ஃபார்முலா.

 

 

 

 

 

 

Related posts

சன்னிலியோன் இமேஜ் மாறும்? ப்ரியாமணி பேச்சு

Jai Chandran

ZEE5-ல் ‘கிஸ்’ நவம்பர் 7 முதல் ஸ்ட்ரீமிங்!..

Jai Chandran

பூமிகா ( பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend