டிவி சீர்யலில் நடித்து பலகோடி உள்ளங்களை கொள்ளை கொண்ட
வி.ஜே சித்ரா நடித்த கால்ஸ் திரைப்படம் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
டிவி நடிகை விஜே சித்ராவுக்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வேண்டும் என்ற அதற்கேற்ப கால்ஸ் என்ற படத்திl ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அவர் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டு இறந்தார்., அது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சித்ரா இறப்பதற்கு முன் கால்ஸ் படத்தில் நடித்தார். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்(first look)ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில் இப்படத்தின் டீசரும் செகண்ட் லுக்கும் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி வெளியானது. இத்திரைப்படம் இப்போது திரைக்கு வர தயாராகி உள்ளது. தற்போது வெளிவந்த டீஸர்(Teaser) பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திரைப்படத்தின் டீஸர்(Teaser) ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
இதுபற்றி கால்ஸ் பட இயக்குனர் ஜெ. சபரிஷ் கூறும்போது, “நம்மிடையே
வி.ஜே சித்ரா தற்போது இல்லையென்றாலும். அவர் இருந்திருந்தால் எத்தகைய அன்பையும் ஆதரவையும் மக்கள் தந்திருப்பார்களோ அதே ஆதரவையும் அன்பையும் தந்துள்ளார்கள். என மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.