Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஹீரோவாக அறிமுகமாகும் விஷ்ணு விஷால் தம்பி ருத்ரா

பிரபல ஹீரோ விஷ்ணு விஷால் தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு இடத்தை பெற்றிருக்கும் நிலையில் அவரைத் தொடர்ந்து அவரது தம்பி ருத்ரா தற்போது திரை உலகிற்கு ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக மிதிலா நடிக்கிறார்.
இப்படத்தை கமல்ஹாசன், நயன்தாரா உள்ளிட்ட பல்வேறு பிரபல நடிகர், நடிகைகள் நடித்த 250க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களை இயக்கியதுடன், பல்வேறு படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்திருப்பவருமான கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்குகிறார். இப்படத்தை விஷ்ணு விஷால் தயாரிக்க அவருடன் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில் கைகோர்த்திருக்கிறார். ஜென்மார்ட்டின் இசையமைக்கிறார்.

இப்படம் பற்றி விஷ்ணு விஷால் கூறியதாவது:
ஓஹோ எந்தன் பேபி படத்தில் எனது தம்பி ருத்ரா கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இப்படம் மூலம் கிருஷ்ணாவும் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். இது ஒரு காதல் கதைதான். கமர்சியல் அம்சங்களுடன் வித்தியாசமான கோணத்தில் இப்படத்தை இயக்குகிறார் கிருஷ்ணா. ருத்ரா ஏற்கனவே இயக்குனர் ஏ ஆர் முருகதாசிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்ததுடன் எனது பட தயாரிப்பு நிறுவனத்தில் பணிகளை கவனித்துக் கொண்டிருந்தார். ருத்ராவுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை அதிகம் இருந்தது. அதற்கு காரணம் அவரது தந்தைதான். உண்மையில் ருத்ரா எனது பெரியப்பா மகன். இவருக்கு எப்படியாவது சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது ஆசை. ஒரு சில படங்களில் நடித்தார். தொடர்ந்து அவர் பெரிய நடிகராக வர முடியவில்லை. நான் (விஷ்ணு) சினிமாவில் நடிக்க தூண்டிய வரும் ருத்ராவின் தந்தைதான்.
என்னை முதல் படத்திலிருந்து பத்திரிக்கை மீடியாக்கள் ஆதரித்து வருகின்றன. நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் இருந்து திரை உலகில் வலம் வருவதற்கு உறுதுணையாக இருக்கிறார்கள். அதேபோல் ஆதரவை எனது தம்பி ருத்ராவுக்கும் அனைவரும் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ஓ எந்தன் பேபி படத்தை தயாரிக்க ரோமியோ பிச்சர்ஸ் ராகுலிடம் கூறினேன். அவர் இயக்குனரிடம் கதை கேட்டுவிட்டு பிடித்திருப்பதாக கூறியதுடன், ருத்ராவுக்கு மிகவும் ஏற்ற படம் என்றதுடன், என்னையும் இந்த பட தயாரிப்பில் இணையும்படி கூறினார். அதனை ஏற்று நானும் தயாரிப்பில் இணைந்தேன். ருத்ரா நடிக்கும் முதல் படத்தை வெளி நிறுவனம் தயாரிக்க முன்வந்தது சந்தோஷமான விஷயம்.

இயக்குனர் கிருஷ்ணகுமார் ராம் குமார் கூறியதாவது:
ஒரு நல்ல கத யும், டைட்டிலும் விஷ்ணு விஷால் தந்தார். அதற்கு திரைக்கதை அமைத்து இயக்குகிறேன். இக்கதை ருத்ராவுக்கு பொருத்தமாக இருக்கும் என்று எண்ணினார். இதையடுத்து ருத்தராவை இந்த படத்தில் ஹீரோவாக அறிமுகம் செய்ய முடிவு செய்தார். விஷ்ணு விஷால் எண்ணியது போலவே ருத்ரா இந்த கதைக்கு பொருத்தமாக இருப்பார் என்பதை நானும் நினைத்தேன். எல்லாம் பொருந்தி வந்தது. இப்படத்தில் விஷ்ணு விஷாலும் நடிக்கிறார். அவர், விஷ்ணு விஷால் என்ற நடிகராகவே இப்படத்தில் வருகிறார். கதைப்படி ருத்ரா, விஷ்ணு விஷாலிடம் ஒரு கதை சொல்லி கால்ஷீட் வாங்க வருகிறார். விஷ்ணு விஷால் வித்தியாசமான பல படங்களில் நடித்திருந்தாலும் முழுக்க முழுக்க ஒரு காதல் படத்தில் நடிக்காத நிலையில் அப்படி ஒரு கதையை தனக்காக தயாரித்து வரும்படி ருத்ராவிடம் கூறுகிறார். அவர் அந்த கதையை உருவாக்கி வந்து அவரிடம் கூறி கால்ஷீட் வாங்கினாரா அதன் பிறகு நடப்பது என்ன என்பதுதான் இப்படத்தின் கதை. இதில் ருத்ரா ஜோடியாக மிதிலா நடிக்கிறார். இவர் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கும் நபர். இன்ஸ்டாகிராமில் அவரது திறமையை பார்த்துத்தான் இந்த படத்தில் அவரை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தேன். தற்போது தலைமுறைகள் மாறிவிட்டன. இப்போதுள்ள தலைமுறை பேசுவது கூட நமக்கு புரிவதில்லை அந்த அளவுக்கு வித்தியாசமான வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். அப்படி ஒரு கதாபாத்திரமும் இந்த படத்தில் இடம்பெற்றிருக்கிறது. வரும் ஜூலை மாதம் இப்படம் திரைக்கு வர இருக்கிறது.

ஹீரோவாக அறிமுகமாகும் ருத்ரா கூறியதாவது:
இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ்தான் எனக்கு குரு. அவரிடம் உதவி இயக்குனராக  பணிபுரிந்திருக்கிறேன். சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற ஆசை இருந்தது, அதனால்தான் உதவி இயக்குனராகவே சேர்ந்தேன். தற்போது ஓஹோ எந்தன் பேபி படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த வாய்ப்பு எனது அண்ணன் விஷ்ணு விஷால் மூலமே கிடைத்திருப்பது இன்னும் சந்தோஷம். நான் ஹீரோவாக அறிமுகம் ஆகும் விவரம் குறித்து எனது குரு ஏ ஆர் முருகதாசிடம் கூறினேன். அவர் எனக்கு ஆசி கூறினார்.
சினிமாவில் நல்ல கதைகளில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. தற்போது காதல் கதையில் நடிக்கிறேன், அடுத்தடுத்து எனக்கேற்ற கதைகள் என்னென்ன வருகிறதோ அதை ஏற்று நடிக்க நான் தயாராக இருக்கிறேன். எனக்கு அனைவரும் ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

 

Related posts

சூப்பர் சிங்கர் & குக் வித் கோமாளி சங்கமம்

Jai Chandran

“பரிமளா & கோ” பட பத்திரிகையாளர் சந்திப்பு..

Jai Chandran

Nayanthara’s first look From Yash’s Toxic..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend