புரட்சிதளபதி விஷால் மக்கள் நல இயக்கத்தின் செயலாளர் ஹரிகிருஷ்ணன் அறிவுறுத்தலின்படி ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷாலின் பிறந்த நாளை சிறப்புடன் கொண்டாடு வதற்காக தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டத்திற்கு உட்பட்ட நகர, ஒன்றிய, பகுதி, கிளை வரியாக உள்ள மக்கள் நல இயக்கத்தின் பொறுப்பாளர்கள் அனைவரும் ஏழை எளிய மக்களுக்கு பயன் பெறும் வகையிலும்
முதியவர்களுக்கு வேட்டி, சேலை வழங்குதல்,
பெண்களுக்கு தையல் மிஷின், தண்ணீர் குடம்,
அரிசி மூட்டைகள் வழங்குதல்
ஆதரவற்ற முதியோர்கள், குழந்தைகள் மற்றும் மனநலம் குன்றியோர் இல்லங்களுக்கு உணவு வழங்குதல்
சாலையோரம் வசிக்கும் ஆதரவற்ற
மக்களுக்கு உணவு வழங்குதல்
சாலையோரம் ஆதரவற்ற நிலையில் சுற்றித் திரிபவர்களை மீட்டு சுத்தப்படுத்தி முதியோர் மற்றும் மன நலம் குன்றியோர் இல்லத்தில் சேர்ப்பது போன்ற செயல்பாடுகளுடன்,
மக்களுக்கு பயனடையும் வகையில் நல திட்ட உதவிகளும் வழங்கி வருகிறார்கள்
அதுமட்டுமின்றி நேற்று விஷால் பர்த்டே காமன் டிபி ( *Vishal birthday common DP* ) என்ற தலைப்பில் ஹாஷ்டேக் ( *Hashtag*) மற்றும் புகைப்படமும் இந்திய அளவில் 12 நிமிடங்களில் ட்விட்டரில் ( Twitter ) முதலிடம் பிடித்தது
நடிகர் விஷால் தனது பிறந்த நாளில் சென்னை கீழ்பாக்கம் மெர்சி ஹோமில் உள்ள ஆதரவுற்ற முதியோர்களுக்கு உணவு வழங்கியும், கெல்லீஸ் பகுதியில் உள்ள சுரபி இல்லத்தில் கேக்வெட்டி குழந்தைகளுடன் உணவு அருந்தியும் மகிழ்ந்தார் அவர்களுடன் மக்கள் நல இயக்கத்தின் செயலாளர் ஹரிகிருஷ்ணன், சென்னை மாவட்ட தலைவர் ராபர்ட், மத்திய சென்னை மாவட்ட தலைவர் சீனு, தென் சென்னை மாவட்ட தலைவர் ராஜா மற்றும் மக்கள் நல இயக்கத்தின் நிர்வாகிகளும் கலந்துக்கொண்டனர்.
தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றும் என நம்புவதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
இன்று தனது 44வது பிறந்த நாளை கீழ்ப்பாக்கத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் நடிகர் விஷால் கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், இந்த இல்லம்
புனிதமான இடம் என்பதால் பிறந்த நாளன்று இங்கு வந்துள்ளதாகவும்
பிறந்த நாளன்று நிறைய நல்லா விசயங்கள் நடப்பதால் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார். பிறந்த நாளுக்கு வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறிய விஷால்
ஒரு ரசிகனாக வடிவேல் மீண்டும் நடிக்க வருவதை வரவேற்பதாகவும் அவர் நிறைய படங்கள் நடிக்க வேண்டும் என்றார்.
முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மற்றும் உதயநிதி அவர்களால் சினிமா துறைக்கு நல்லது நடக்கும் என நம்புவதாகவும் நடிகர் சங்க வழக்கு நிலுவையில் இருப்பதால் கொரோனா காலத்தில் உயிரிழந்தவர்களுக்கு உதவ முடியவில்லை எனவும் விஷால் கூறினார். ஸ்டாலின் நன்றாக ஆட்சி செய்வார் என்பதால் தான் மக்கள் அவரை தேர்ந்தெடுத்ததாகவும் மேலும் சிறப்பாக அவர் செயல்படுவார் என நம்புவதாகவும் கூறினார்.