Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

விருமன் (பட விமர்சனம்)

படம்: விருமன்

நடிப்பு: கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண், ஆர்.கே.சுரேஷ், கருணாஸ், சூரி, மனோஜ் பாரதிராஜா, ராஜ்குமார், வாசு மித்ரன், ஜி.என்.சுந்தர், சிங்கம் புலி, ஓ.ஏ.கே.சுந்தர், ரிஷி, சரண்யா, வடிவுக்கரசி, நந்தினி, இந்திரஜா, இந்துமதி
:
தயாரிப்பு:சூர்யா,

இணை தயாரிப்பு: ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன்

இசை: யுவன் சங்கர் ராஜா

ஒளிப்பதிவு: எஸ்.கே.செல்வகுமார்

இயக்கம்:முத்தையா

பி.ஆர் ஒ: ஜான்சன்

முனியாண்டிக்கு (பிரகாஷ்ராஜ்) விருமன் (கார்த்தி) உள்ளிட்ட 4 பிள்ளைகள். முனியாண்டி மற்றொரு பெண்ணுடன் தொடர்பு வைத்ததால் முனியான்டி மனைவி தீக்குளித்து சாகிறார். கண்முன் தாய் தீயில் கருகுவதை கண்டு தந்தை மீது தீராத ஆத்திரம் கொள்ளும் விருமன் அவரை கொல்ல முயலும் நிலையில் தாய்மாமன் பேச்சை கேட்டு கோபத்தை அடக்கிக் கொண்டு அவர் வீட்டிலேயே வளர்கிறார். ஆனாலும் தந்தை மகனுக்கு இடையே மோதல் ஓயவில்லை. எப்படியாவது விருமனை ஒழித்துக்கட்ட முனியான்டி முயல் கிறார். இதற்கிடையில் முனியான்டியின் மற்ற 3 மகன்கள் தந்தை செய்யும் அவமானத்தால் ஒவ்வொருவராக வீட்டை விட்டு வெளியேறி விருமனுடன் வந்து சேர்கின்றனர். முனியான்டியை அவருடன் இருந்தவரே சொத்துக் காக கொல்ல திட்டமிடுகிறார். அதை விருமன் அம்பலப்படுத்து கிறார். உறவுகள் எல்லாம் விட்டு விலகி தனி மரமாகும் முனியான்டி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப் படுகிறார். பிரிந்த உறவுகள் திரும்ப வந்ததா? விருமன் எடுத்த முடிவு என்ன ? என்பதற்கு நெகிழ்ச்சியான பதில் அளிக்கிறது கிளைமாக்ஸ்.

பொருளாதார சூழல், நாகரீக மாற்றங்களுக்கு ஏற்ப குடும்பங்கள் சுருங்கிக்கொண்டே வருகிறது. வீட்டுக்கு இரண்டு பிள்ளையாகி இப்போது ஒரு பிள்ளை போதும் என்றாகிவிட்டது. அத்தை, மாமன் அண்ணன், தங்கை என்ற உறவுகளே எதிர்காலத்தில் இருக்குமா என்பது கேள்விக்குறியாகி வரும் நிலையில் உறவு முறைகள், சொந்த பந்தங்களின் முக்கியத்து வத்தை உணர்த்தும் படமாக உருவாகியிருக்கிறது விருமன்.

குடும்ப உறவுகள் பற்றி பேசும் படங்களில் அதன் முக்கியத்து வத்தை உணர்த்தும் விதமாக ஏற்கனவே கார்த்தி நடித்திருந் தாலும் மீண்டும் அந்த உறவுகளை மனதில் ஆழ பதியும் விதமான நடிப்பை விருமனாகவும் தரத் தவறவில்லை.

பெண்களுக்கு ஆதரவாக பேசி அவர்கள் மனதில் இடம்பிடிக்கும் அதே நேரத்தில் இளைஞர் களையும், ரசிகர்களையும் தனது அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் மூலம் வளைத்துப் போடுகிறார். முதல் காட்சி அறிமுகமே ரிஷியுடன் மோதும் மல்யுத்த சண்டையில் அடித்து துவம்சம் செய்கிறார்.

தந்தை பிரகாஷ்ராஜுடன் சரிக்கு சரியாக மோதும் கார்த்தி தனது அண்ணன்களிடம் மட்டும் பாசம் காட்டி பம்முறுகிறார். வீட்டுப் பத்திரத்தில் கார்த்தியை கையெ ழுத்து போடும்படி பிரகாஷ்ராஜ் எவ்வளோ மிரட்டியும் கையெழுத்து போடாத கார்த்தி தனது அண்ணனுக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக பத்திரத்தில் கையெழுத்து போட்டு தருவது நெஞ்சை கனமாக்கு கிறது. இதுபோல் நெகிழ வைக்கும் இன்னும் சில காட்சிகள் படத்தின் ஜீவன்.

 

இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி சங்கர் தேன்மொழி என்ற பாத்திரத்தில் அறிமுக மாகியிருக் கிறார். சரசரவென பேசும் பேச்சும், புருவத்தை அசைத்து கண்களால் கார்த்தியுடன் காதல் மொழி பேசுவதுமாக அசல் கிராமத்து பெண்ணாக வாழ்ந்திருக்கிறார். “உன்னை இங்குதானே அடித்தான்” என்று கார்த்தியின் கன்னத்தில் முத்தமிடும்போது கண்களை பனிக்கச் செய்கிறார்.

ஊர் பஞ்சாயத்தில் கார்த்திக்கும் பிரகாஷ்ராஜிக்கும் பேச்சு முற்றி மோதலாகும் நிலையில் குறுக்கே புகுந்து கார்த்திக்கு அதிதி உதட்டு முத்தமிட்டு ஊர்வாயை அடைப்பது ஷாக்.

நடன காட்சிகளில் செம குத்தாட்டம் போடும் அதிதி அதில் நளினத் தையும் காட்டப் பழக வேண்டும்.

சூரி, சிங்கம் புலி, இந்தராஜா கொஞ்சமாக கலகலக்க வைக் கின்றனர்.

நட்சத்திர கூட்டத்தில் கரைந்து போகாமல் கெத்துகாட்டுகிறார் ராஜ்கிரண்.

வடிவுக்கரசியின் அந்த மிரட்டல் குரல் கொஞ்சமும் குறைய வில்லை. ஆர்.கே.சுரேஷ் கார்த்தி யுடன் மோதி உசுப்பேற்றுகிறார்.

எம் எல் ஏவாக வரும் ஜி.என்.சுந்தர், கார்த்தி தன் அண்ணனுக்காக பெண்கேட்டு வரும் போது, “நீ கேட்டு தராமலிருப்பேனா?” என்று சொல்லி பிரகாஷ்ராஜின் மூக்கை உடைக்கும்போது ஸ்கோர் செய்கிறார்.

2டி நிறுவனம் சார்பில் சூர்யா கிராண்டாக படத்தை தயாரித்தி  ருக்கிறார்.

உறவுகளின் அருமையை பசுமரத்தாணிபோல் மனதில் பதிய வைக்கிறார் இயக்குனர் முத்தையா.

யுவன் இசையில்” கஞ்சா பூ கண்ணாலே.” பாடல் உதட்டில் ஒட்டிக்கொள்கிறது.

எஸ்.கே.செல்வகுமாரின் கேமிரா கிராமத்து பசுமையை செம்புழுதி பறக்க வித்தியாசமான காட்சி களாக பதிவு செய்திருக்கிறது.

விருமன்- பிரிந்த உறவுகளை இணைக்கும் பெவிகால்.

 

 

Related posts

நடிகையாக விரும்பும் மாடல் அழகி தர்ஷிகா

Jai Chandran

“நாகபந்தம்” திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு..

Jai Chandran

Handsome AbiHassan and AnjuKurian in Sila Nerangalil Sila Manidhargal

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend