Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

காதலை சொல்லாமலே காதல் திருமணம் செய்யும் நிக்கி கல்ராணி, ஆதி ஜோடி

மிருகம்,  மரகத நாணயம் சமீபத்தில் திரைக்கு  வந்து வெற்றிபெற்ற கிளாப், விரைவில் வெளிவரவிருக்கும் வாரியர். போன்ற படங்களில் நடித்திருப்பவர் ஆதி.  அதேபோல் டார்லிங்,  வேலன்னு வந்துட்டடா வெள்ளக்காரன், உள்ளிட்ட பல படங்களில்  நடித்திருப்பவர் நிக்கி கல்ராணி .

ஆதி, நிக்கி கல்ராணி இருவரும் காதலித்து வந்தனர். தற்போது குடும்பத்தார் சம்மத்துடன்  திருமணம் நடக்க உள்ளது. மே மாதம்18ம் தேதி இவர்கள் திருமணம் சென்னையில் நடக்க உள்ளது. இதில் திரையுலகினர், குடும்பத்தினர், நண்பர்கள் கலந்துகொள் கின்றனர்.

முன்னதாக சமீபத்தில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்நிலையில் ஆதி, நிக்கி கல்ராணி இருவரும் இன்று பத்திரிகை , மீடியா நிருபர்களை சந்தித்தனர். அப்போது ஆதி கூறியதாவது:

நிக்கியுடன் எனது திருமணம் நடக்க உள்ளது. அதற்கான வேலைகள் இன்று முதல் தொடங்கி உள்ளது. இருவரும் பல முறை சந்தித்துக்கொண்டபோதும் இருவரும் ஒருவரை யொருவர் காதலிப்பதாக  கூறிக்கொள்ளவில்லை. ஆனால் எங்களுக்குள் காதல் இருந்தது. நிக்கியின் அழகு அவரது துணிச்சல் எனக்கு பிடிக்கும். எனக்கு நிக்கியை பிடிக்கும்  என்னைவிட என் குடும்பத்தி னருக்கு அவரை ரொம்ப பிடிக்கும் .

எங்களது திருமணம் திரையுலகினர், உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் நடக்க உள்ளது.

இவ்வாறு ஆதி கூறினார்.

நிக்கி கல்ராணி கூறியதாவது:

ஆதியை அவருடன்   சேர்ந்து நடித்த மரகத நாணயம் படத்திற்கு முன்பிருந்தே தெரியும் இருவரும் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டிருக்கிறோம். திருமணத்துக்கு பிறகு  நான் நடிப்பதா? இல்லையா என்பதுபற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. எங்களுக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு நிக்கி கல்ராணி கூறினார்.

பேட்டியின்போது பி ஆர் ஒக்கள் ஜான்சன், ரியாஸ் அஹமத் உடனிருந்தனர்.

 

 

Related posts

ருத்ரதாண்டவம் படம் பற்றி இயக்குனர் தங்கர்பச்சான் அறிக்கை

Jai Chandran

‘ஹவுஸ் மேட்ஸ்’ ஹாரர் படமா? நடிகர் தர்ஷன் பதில்

Jai Chandran

சூர்யா நடித்த ஜெய்பீம் படத்துக்கு முதலவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend