தளபதி விஜய் 46வது பிறந்ததினம்..
மாஸ்டர் புது போஸ்டர் ரிலீஸ்..
தளபதி விஜய்க்கு இன்று 46வது பிறந்த தினம். இதையொட்டி மாஸ்டர் படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது. அது நெட்டில் வைரலானது. ரசிகர்கள் விஜய்க்கு பிறந்த தினஹேஷ்டேக் உருவாக்கி ட்ரெண்டிங் ஆக்கினர்.
திரையுலகை சேர்ந்த
நடிகர்கள் விஷால், ஆர்யா பிரசன்னா, விக்ரம் பிரபு, ஜீவா விஷ்ணு விஷால், சிபிராஜ், எஸ் ஜே சூர்யா., பஹரீஷ் கல்யாண், நிதின் சத்யா,
நடிகைகள் ராதிகா சரத்குமார், காஜல் அகர்வால், ஐஸ்வர்யா ராஜேஷ், மன்ஞ்சிமா மோகன்,
டைரக்டர்கள் ஏ.ஆர்.முருகதாஸ் பாண்டிராஜ், அட்லீ, லோகேஷ் கனகராஜ் இணைய தளத்தில் வாழ்த்து தெரிவித்தனர்.
‘மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறும்போது, ‘மாஸ்டரில் தளபதியுடன் பணியாற்றிய போது இருந்த நேரங்களை ஒரே வார்த்தையில் சொல்லி விடமுடியாது. அவருடன் இருந்த ஒவ்வொரு நிமிடமும் மறக்க முடியாது’ என விஜய்யை அண்ணா என சொல்லி வாழ்த்து சொல்லியிருக்கிறார்