விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு, அது இது எது போன்ற டிவி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி நேற்று மாரடைப்பில் மரணம் (செப் 10) அடைந்தார். அவருக்கு வயது 45. அவரது உடல் இன்று அடக்கம் செய்யப் பட்டது.
முன்னதாக நடிகர் விஜய் சேதுபதி வடிவேலு பாலாஜி உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்றார் அவரைக் கண்டதும் குடும்பத்தினர் கதறி அழுதனர். அவர்களுக்கு விஜய் சேதுபதி ஆறுதல் கூறியதுடன், நிதி உதவியும் அளித்தார்.
வடிவேல் பாலாஜியின் மரணம் பற்றி அறிந்து வருத்தம் அடைந்த நடிகர் சிவகார்த்திகேயன் வருத்தம் தெரிவித்தார்.
வடிவேல் பாலாஜியின் மகன் ஸ்ரீகாந்த், மகள் சத்யஸ்ரீ ஆகியோரின் கல்விச் செலவைத் தான் ஏற்றுக் கொள்வதாக சிவகார்த்தி கேயன் தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய அது இது எது’ நிகழ்ச்சியில், ‘சிரிச்சா போச்சு’ சுற்றில் வடிவேல் பாலாஜி தான் பங்கேற்றிருப்பார்.
டிவியிள் மட்டுமல்லாமல் ’சுட்ட பழம்’ உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்
பாலாஜி உட லுக்கு நடிகர் சவுந்தர ராஜன் மற்றும் ஏராளமான டிவி நட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்தினர்.