Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

திரை அரங்கு உரிமையாளர்களுக்கு விநியோகஸ்தர்கள் 4 முக்கிய தீர்மானம்.. டைரக்டர்  டி.ராஜேந்தர் வெளியிட்டார்..

சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை சங்க தலைவர் டி.ராஜேந்தர்  வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:

கியூப் (QUBE), யு எப் ஒ (UFO), ஸ்கிரைப் (SCRBBLE) நிறுவனங்கள் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்கள் ஆகியோரிட மிருந்து வசூல் செய்யும் தொகை குறித்து திரையரங்க உரிமையாளருக்கு வைக்கும் கோரிக்கை
1. திரையரங்க உரிமையாளர் அவர்கள் சொந்த செலவிலேயே Digital Projector களை அமைத்து கொள்ளுதல் அவர்களது கடமை மற்றும் உரிமை. அதை எந்த நிறுவனத்திடம் பெறுகிறார்களோ, அதற்கு உண்டான தொகையை மொத்த மாகவோ, தவணை முறையிலோ அவர்கள் தான் செலுத்த வேண்டும்.
2.மற்றும் பத்து ஆண்டுகளுக்கு மேலாக இதன் மூலம் பல ஆயிரம் கோடி இங்கிருந்து செலுத்தப்பட்டுள்ளது.
3. மேலும் உலகம் முழுவதும் VPF கட்டணம் ரத்தாகி இரண்டு ஆண்டு களாகிறது. ஆனால் நமது இந்திய நாட்டில் மட்டும் இந்த கொடுமை நீடித்துக் கொண் டிருக்கிறது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
4. இதை ரத்து செய்வதன் மூலம் சிறிய பட தயாரிப்பாளர்கள் / விநியோகஸ்தர்களுக்கு சுமார் 100 பிரதிகளுக்கு ரூபாய் 25 லட்சங் கள், பெரிய படங்களின் தயாரிப்பாளர்கள் / விநியோகஸ்தர்களுக்கு சுமார் 500 பிரதி களுக்கு ரூபாய் 1 கோடி 25 லட்சங்கள், 1000 பிரதிகளுக்கு ரூபாய் 2 கோடி 50 லட்சங்கள் வரை படத்தயாரிப்பாளர்கள் / விநியோ கஸ்தர்கள் பல கோடி ரூபாய் இதன் மூலம் பயன் அடையலாம்
எனவே வருங்காலத்தில் தயாரிப்பாளர்கள் / விநியோகஸ்தர்கள் திரையரங்க உரிமை யாளர்கள் யாரும் VPF தொகையை செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தக் கூடாது என்ற கோரிக்கையினை வைக்கின் றோம். தேவைப்பட்டால் படத்தின் பிரதியை Hard Diskல் கொடுத்து விடுகின் றோம். அதற்கான செலவு குறைந்தது ரூபாய் 500/- முதல் 1000/- வரை தான் ஆகும். அதனை நாங்கள் தயாரிப்பாளர்கள் / விநியோகஸ்தர்கள் கலந்து பேசி ஏற்றுக் கொள்கின்றோம்.
குறிப்பு: மேற்படி கோரிக்கையினை தயாரிப்பாளர்கள் / விநியோகஸ்தர்கள் நலன் கருதி திரையரங்க உரிமையாளர் களுக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் சரியானது என்று கருதும் இந்திய அளவில் உள்ள அனைத்து தயாரிப்பாளர்கள் / விநியோகஸ்தர்கள் தங்களின் கருத்தினை சென்னை செங்கல்ப்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்திற்கு தெரியப்படுத்தும்படி கேட்டுக் கொள்கின்றோம். (Mail ID – cktdfdass@gmail.com)
இவ்வாறு டி.ராஜேந்தர் கூறி உள்ளார்.

 

Related posts

1 crore+ digital views for PushpaTrailer tease

Jai Chandran

முதல்வர் ஸ்டாலினிடம் ஏ ஆர் முருகதாஸ் ரூ 25லட்சம் நிதி

Jai Chandran

நாட்படு தேறல் – தலைப்புப் பாடல் வைரமுத்து வெளியிட்டார்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend