Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

ஜென்டில்மேன் 2’ம் பாகம் திரைப்படம்.. மீண்டும் பிரமாண்டமாக களம் இறங்கும் கே டி குஞ்சுமோன்..


கதை சொல்லும் சினிமா, பிரமாண்ட சினிமா என்கின்ற சினிமா படைப்பு களில்.. கதையுடன் கூடிய பிரமாண்ட சினிமாவை அதிரடியாக தயாரித்துக் காட்டியவர் கே.டி.குஞ்சுமோன். வசந்தகால பறவை, சூரியன் படங்களின் மாபெரும் வெற்றிகளை தொடர்ந்து, 1993ல் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட படம் “ஜென்டில்மேன்”. ஷங்கரை டைரக்ட ராக அறிமுகப்படுத்திய படம். நாயகன் அர்ஜுனுக்கு திருப்புமுனை ஏற்படுத் திய படம். ஏ.ஆர்.ரஹ்மானின் அனைத்து பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது. படத்தின் வியாபாரத்தை தாண்டி பல மடங்கு செலவு செய்து ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களுக்கு தனித்துவத்தை ஏற்படுத்தினார். ஒரு சிறிய காதல் கதையான “காதல்தேசம்” படத்தை பிரமாண்டப்படுத்தி ரசிகர்களிடம் ஹீரோவாக உயர்ந்து நின்றார். ” காதலன் ” படத்தின் மூலமாக பிரபு தேவாவை ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். அவர் தன்னுடைய பிரமாண்ட தயாரிப்பான , ‘ரட்சகன்’ மூலம் தமிழ் திரை உலகிற்கு தெலுகு சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனாவை அறிமுகபடுத்தினார். மேலும் அவர் மிஸ் யூனிவர்ஸ் சூஷ்மித்தாசென்யை வெள்ளி திரைக்கு அறிமுகம் செய்தார்.. மேலும் பல நடிகர் நடிகைகள் மற்றும் பல தொழில் நுட்ப கலைஞர்களை அறிமுகப் படுத்தினார். இப்பொழுது அதே பிரமாண்டத்துடன் மீண்டும் ரசிகர்களை குஷி படுத்த வருகிறார். இந்திய சினிமா வரலாற்றில் முக்கிய படமான “ஜென்டில்மேன் ” படத்தின் இரண்டாம் பாகத்தை அதிரடியாக தயாரிக்கிறார். ஜென்டில்மேன்2 மூலம் மீண்டும் தயாரிப்பு வேலைகளை ஆரம்பிக்கிறேன் என்கிற அவர்
மேலும் கூறும்போது.. ஜென்டில்மேன் தமிழ் , தெலுங்கு, மொழிகளில் மெகா ஹிட் ஆக்கினார்கள் மக்கள். இந்திய மற்றும் உலகம் முழுவதும் பல மொழிகளில் வெளியிடப்பட்ட இப்படத்தை ரசிகர்கள் கொண்டாட் டமாக வரவேற்றார்கள்.
ஜென்டில்மேன் படத்தைவிட இரண்டு மடங்கு பிரம்மாண்டம் ஜென்டில் மேன்-2 வில் காணலாம்.
நவீன தொழில் நுட்பத்தில், ஹாலிவுட் படங்களின் தரத்தில், மெகா பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் ஜென்டில் மேன் பிலிம் இண்டர்னேஷ்னல் நிறுவனம் சார்பில் இப்படம் தயாரிக்கப் படும். நடிகர், நடிகை மற்றும், தொழில் நுட்ப கலைஞர்க ளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கிறது.
ஜென்டில்மேன்-2 பற்றிய அதிகார பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளி வரும். இந்த திரைப்படம் முதலில் உலகம் முழுவதும் உள்ள திரையரங் குகளில் வெளியான பிறகு தான் மற்ற ஊடகங்களில் வெளியிடப்படும் என்ற கருத்தையும் தெரிவித்தார். மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்மூட்டி, மோகன்லால் மற்றும் பலரை வைத்து பல மலையாள படங் களை தயாரித்த இவர் தமிழ் சூப்பர் ஸ்டார்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் பிற மொழி படங்களை தமிழகம் கேரளா மற்றும் மஹாராஷ்டிராவில் வெளியிட்டார். எந்த படத்தை வெளியிட்டாலும் பிரமாண்டமாக செலவு செய்து பப்ளிசிட்டி செய்வதால்..
கே.டி.குஞ்சுமோன் வெளியீடு ரசிகர்களுக்கு எப்போதும் கொண்டாட்டம் தான்.

Related posts

ரவிதேஜாவின் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ படப்பிடிப்பு தொடக்கம்

Jai Chandran

காற்றே வராத குகைக்குள் ஜித்தன் ரமேஷ்

Jai Chandran

First Song from RRR Movie on August 1st

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend