Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சத்தியமங்கலம் காட்டில் விஜய்சேதுபதி-சூரி படப்பிடிப்பு..

ஆர்.எஸ். இன்பொடெயின்மெண்ட் (RS Infotainment) தயாரிப்பாளர் எல்ரெட் குமார் வழங்கும், தேசிய விருது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், வாத்தியாராக விஜய் சேதுபதி மற்றும் கதையின் நாயகனாக நடிகர் சூரி நடிக்கும் “விடுதலை” !

தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் முற்றிலும் மாறுபட்ட களங்களில், தன் தனித்த முத்திரை கொண்ட படங்களினால் இந்திய அளவில் ரசிகர்களை கவர்ந்து புகழ்பெற்றுள்ளார். தயாரிப்பாளர் எல்ரெட் குமார் ஆர்.எஸ். இன்பொடெயின்மெண்ட்  நிறுவனம் சார்பில் அழுத்தமான கதைகள் கொண்ட வெற்றி படங்களை தந்து விமர்சர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் கொண்டாடும், மிக சிறந்த தயாரிப்பாளராக மிளிர்ந்து வருகிறார். இவ்விருவரும் தற்போது ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளார்கள். “விடுதலை” என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் சூரி முன்னணி பாத்திரத்தில் நடிக்கிறார்கள். இயக்குநர் வெற்றிமாறன் முதன்முறையாக இப்படத்தில் இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு மின்சாரம் மற்றும் தொலைதொடர்பு அற்ற சத்தியம்ங்கலத்தின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. வெற்றிமாறன், விஜய்சேதுபதி, சூரி, பவானிஶ்ரீ உட்பட மொத்த படக்குழுவும் அங்கேயே குடியிருப்பு வசதிகள் ஏற்படுத்தி, தங்கி படப்பிடிப்பை நடத்துகின்றனர்.

“அசுரன்” படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குநர் வெற்றிமாறன் மீண்டும் ஒரு வித்தியாசமான கதைகளத்துடன், சீட் நுனியில் அமரவைக்கும், பரபர திரில்லான திரைக்கதையுடன் ரசிகர்களை அசத்தவுள்ளார்.

வெற்றிமாறன் படங்களில் தொடர்ந்து பணியாற்றும் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார். R.ராமர் படத்தொகுப்பு செய்கிறார். பீட்டர் ஹெய்ன் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றுகிறார். ஜாக்கி கலை இயக்கம் செய்கிறார்.

ஆர்.எஸ். இன்பொடெயின்மெண்ட்  தயாரிப்பாளர் எல்ரெட் குமார் இப்படத்தினை பிரமாண்ட முறையில், இந்தியாவெங்கும் தமிழ் மட்டுமல்லாது, பல மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டு வருகிறார்.

Related posts

PrankstarRahul as “Sathish”

Jai Chandran

AnandhamVilayadumVeedu wishes Gautham_Karthik

Jai Chandran

A for Annaatthe lyric video

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend