Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

வெஞ்சன்ஸ் (பட விமர்சனம் )

படம்: வெஞ்சன்ஸ்

நடிப்பு: அபர்நிதி, இளவரசு, ஜான் விஜய், ஒய் ஜி மகேந்திரன், லிவிங்ஸ்டன், காளி வெங்கட், சரவணன் சுப்பையா, சுரேஷ் சக்ரவர்த்தி

தயாரிப்பு: ஏ பி அசோக்குமார்

இசை: கார்த்திக் ராஜா, அருண் ராஜ்

ஒளிப்பதிவு: எம் எஸ் பிரபு

இயக்கம்: ராகுல் அசோக்

பிஆர்ஓ : நிகில் முருகன்

பள்ளிக்கூடத்தில் தன்னை யாருமே கண்டு கொள்வதில்லை என்று தந்தையிடம் வருத்தப்படுகிறாள் வேணி (அபர்நிதி ). மாவட்டத்திலேயே முதல் மாணவியாக வந்தால் உன்னை எல்லோரும் பாராட்டுவார்கள் என்று தந்தை சொல்ல அதை கேட்டு வேணி முதல் மாணவியாக வருகிறாள். மீடியாக்கள் அவரை பிரபலப்படுத்துகின்றன. இதில் மகிழ்ச்சி அடையும் வேணிக்கு அந்த மகிழ்ச்சி இரண்டு மூன்று நாட்கள் மட்டுமே நீடிப்பதால் மீண்டும் புகழ் போதைக்கு அடிமையாகிறாள். ஒரு கட்டத்தில் தனது தந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்து பிரபலம் ஆகிறாள். பிற்காலத்தில் படித்து மாவட்ட கலெக்டராக பதவி ஏற்கும் வேணி தனது புகழ் போதைக்காக என்னென்ன அடாவடித்தனங்களை மறைமுகமாக செய்து தன்னை பிரபலப்படுத்திக் கொள்கிறார் என்ற புதிய கோணத்தில் படத்தின் கதை செல்கிறது.

மேலே குறிப்பிட்டபடி வெஞ்சன்ஸ் படத்தின் கதை  திரைக்கதை என்பது ஒரு புதிய கோணத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் ஹீரோ  கிடையாது  அபர்நிதிதான் ஹீரோ, ஹீரோயின் எல்லாம். இந்த கதாபாத்திரத்தை மனதுக்குள் உள்வாங்கி நடித்தால் மட்டுமே நடிப்பிலும் ஜெயிக்க முடியும்,  கதாபாத்திரத்தையும் நிலை நிறுத்த முடியும் என்ற சவால் இருந்தாலும் அதை அபர்நிதி உள்வாங்கி நடித்திருக்கும் விதம் மிரட்டலாக எதிரொலிக்கிறது.

ஒரு மாவட்ட கலெக்டராக இருந்துக் கொண்டு முதலமைச்சருக்கே சவால் விட்டு மோதலுக்கு தயாராவது பின்னர் டெல்லி வரை இவரது புகழ் பரவி முதலமைச்சருக்கு அட்வைஸ் தரும் தேர்தல் வியூக அமைப்பாளராக வந்து நடிப்பில் அராத்து செய்திருக்கிறார் அபர் நிதி. அவர் என்னவெல்லாம் ஆக்சன் செய்து நடித்திருக்கிறார் என்பதை  படத்தில் பார்த்தால் தான் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்புடன் ரசிக்க முடியும் என்பதால் அவர் செய்யும் அந்தர் வேலைகளை இங்கு சஸ்பென்சாக விடுவது தான் சரியாக இருக்கும்.

முதலமைச்சராக வரும் இளவரசு தனது கெத்தை விட்டுக் கொடுக்காமல் நடித்திருக்கிறார். மத்தியிலிருந்து ஆட்டி வைக்கும் அமைச்சர் ஜான்விஜய் வில்லத்தனங்களை போனிலேயே நடத்தி முடிப்பது சில டெல்லி ஆட்சியாளர்களின் அராஜகத்தை தோலுரிக்கிறது.
அரசியல்வாதியாக வரும் லிவிங்ஸ்டன் டெல்லி மந்திரிக்கு அடிமையாகி அவர்யிட்ட கட்டளைகளை அப்படியே செய்வது நம்மூர் அரசியல்வாதிகள் சிலரை நினைவூட்டுகிறது.

மேலும் சச்சு, ஒய் ஜி மகேந்திரன், லிவிங்ஸ்டன், சரவணன் சுப்பையா, சுரேஷ் சக்ரவர்த்தி  நடித்திருக்கிறார்கள்.

கார்த்திக் ராஜா, அருண் ராஜ் இருவரும் இசையமைத்திருக்கிறார்கள் பாடல் இசையும் பின்னணி இசையும் கைகொடுத்திருக்கிறது.

எம். எஸ். பிரபு ஒளிப்பதிவு தரம்.

கதையை 2042ல் தொடங்குவது போல் இயக்குனர் ராகுல் அசோக் ஓபன் செய்யும்போது ஏதோ புதுவகை பேண்டஸிதை சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்படுகிறது ஆனால் மீண்டும் 1985 க்கு கதை பின்னோக்கி நகர்ந்து வழக்கமான ஒரு அரசியல் நய்யாண்டி கதையாக மாறுவது சற்று ஏமாற்றமாக இருந்தாலும் ஒரு கலெக்டரால் இவ்வளவெல்லாம் செய்ய முடியுமா என்ற ஒரு ஆச்சரியத்தை தரும் வகையில் அதிரடியாக திரைக்கதை அமைத்து படத்தை ரசிக்க வைத்து விடுகிறார்.

வெஞ்சன்ஸ்- ஒரு பெண் கலெக்டரின் அரசியல் சூழ்ச்சி ஆர்ப்பாட்டம்.

Review By
K. Jayachandhiran
trending cinemas now.

Related posts

அநீதி ( பட விமர்சனம்)

Jai Chandran

Radhe Shyam made business of 400 Crores in just a span of 10 days!

Jai Chandran

Rocketry: The Nambi Effect On 1st July

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend