Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

டேக் டைவர்ஷன் ( பட விமர்சனம்)

படம்: டேக் டைவர்ஷன்

நடிப்பு:  சிவக்குமார், பாடினி குமார், காயத்ரி, ஜான் விஜய், ராம்ஸ், விஜய் டிவி புகழ் ஜார்ஜ் விஜய், பாலா ஜெ சந்திரன், சீனிவாசன் அருணாச்சலம்

தயாரிப்பு: சுபா செந்தில்

இசை: ஜோஸ் ப்ரங்க்ளின்

ஒளிப்பதிவு: ஈஸ்வரன் தங்கவேலு

இயக்கம்: சிவானி செந்தில்

பி ஆர் ஒ: சக்தி சரவணன்

நைன்டீஸ் கிட்ஸ் சிவகுமாருக்கு 4 வருட மாக பெண்  தேடியும் கிடைத்தபாடில்லை. பெண் பார்க்கச் செல்லும் இடத்தில் ஏதாவது ஒரு குறை சொல்லி மணக்க மறுக்கிறார். ஒரு கட்டத்தில் வேறு பெண்ணை பார்க்கமுடியாது என்ற சூழலில் முதலில் பார்த்து ரிஜெக்ட் செய்த பெண்ணையே மணக்க சம்மதிக்கிறார். மாலையில் பாண்டிச்சேரியில் நிச்சயதார்த்தம்  ஃபிக்ஸ் செய்துவிட்டு புறப்படும்  சிவகுமாரிடம் அவரது பாஸ் ஜான் விஜய் ஒரு பெண்ணை சந்தித்து அழைத்து வரச் சொல்கிறார். அந்த பெண்ணை அழைக்கச் சென்ற சிவக் குமார் உள்ளூர் ரவுடிகளிடம் சிக்கிக் கொள்கிறார். 7 லட்சம் தந்தால்தான் பெண்ணை அனுப்புவோம் என்று ரவுடி சொல்கிறான். அவனை ஏமாற்றிவிட்டு சிவக்குமார் பெண்ணுடன் எஸ்ஸாகிறார். ரவுடி கூட்டம் விடாமல் துரத்துகிறது. இதற்கிடையில்தான் நிச்சயதார்த்தம் செய்யவிருக்கும்  பெண் வழியில் சிவக்குமார் செல்லும் காரில் ஏறுகிறார். இப்போது இரண்டு பெண்களுடன் பயணம் செய்ய ரவுடி கூட்டம் வழிமறிக் கிறது. இடியாப்ப சிக்கலில் சிக்கிக் கொள்ளும் சிவக்குமார் அதிலிருந்து எப்படி மீள்கிறார்? நிச்சயதர்த்தம் நடந்ததா? என பல கேள்விகளுக்கு வயிறு வலிக்கும் சிரிப்புடன் கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.

வாழ்க்கை பாதையில் டேக் டைவர்ஷன் எடுக்க வேண்டி வந்தால் அதை துணிச்ச லாக எடுத்துச் செல்லும்போது நல்லதே நடக்கும் என்ற கருவை மையமாக கொண்டு படத்தை இயக்கியிருக்குறார் சிவானி செந்தில்.

நைன்டீஸ் கிட்ஸ், 80ஸ் கிட்ஸ், 70ஸ் கிட்ஸ் என எல்லோரையும்  ரணகள கலாயுடன் காட்சிகளை கொண்டு சென்றிருக்கும் விதம் கவலையை மறந்து சிரிக்க வைக் கிறது.

கண் பெரிதாக இருக்கிறது என்று  பாடினியை சிவகுமார் ரிஜெக்ட் செய்து விட்டு பின்னர் பெண் கிடைக்காமல் தவிப்பதும் பின்னர்  பாடினியையே மணக்க சிவக்குமார் சம்மதித்து நிச்சய தார்த்தம் செய்ய புறப்படும்போது அவரது பாஸ், ஜான் விஜய் ஒரு வேலையை கொடுக்க அதில் வில்லங்கம் இருக்கிறது என்பதை உணரமுடியவில்லை.

விஷயம் தெரியாமல் ஜான் விஜய் சொன்ன பெண்ணை அழைக்கச் செல்லும் சிவக்குமார் ராம்ஸின் ரவுடி கூட்டத்திடம் சிக்கிக் கொள்வது கலகலப்பு.

ரவுடிகள் பிடித்து வைத்திருந்த பெண் காயத்ரியுடன் சிவக்குமார் காரில் தப்பிப்பதும் அவர்களை ரவுடிகள் துரத்து வதும் பூனை எலி துரத்தல் காட்சிகளாகி சுவாரஸ்யத்தை கூட்டுகிறது.

சிவக்குமார் கூடவே வரும் பாஸ் ஜான் விஜய்யின்  எடுபுடி மற்றும் காயத்ரியை ஒன் சைடாக காதலிக்கும் இளைஞன் சேட்டைகள் தொடர் சிரிப்பு வெடிகள்.

காயத்ரியால் பாடினி,  சிவக்குமார் இடையே ஏற்படும்  மோதல்கள் ஒரு கட்டத்தில் முற்றி பாடினியே,  சிவக் குமாரை பிடிக்கவில்லை என்று சொல்லி ரிஜெக்ட் செய்துவிட்டு செல்லும்போது அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை யூகிக்க  முடிந்தாலும் அடுத்த டுத்த காட்சிகளையும் கலகலப்பு  குறையாமல் நகர்த்தியிருப்பது இயக்குனரின் புத்திசாலித்தனம்.

ஜான் விஜய்யை ராம்ஸின் ரவுடி கூட்டம் ஒரு கைபார்ப்பதும், நீச்சல்குளத்தில் மூழ்கும் ஜான் விஜய்யை காப்பாற்ற வாயோடு வாய் வைத்து தண்ணீரை உறிஞ்ச ராம்ஸ் தயாராவது காமெடி ஹைலைட்.

பாடினி அலட்டல் இல்லாமல் நடித்திருக் கிறாரென்றால் காயத்ரி தொடக்கம் முதல் துள்ளலாக நடித்து கவனத்தை ஈர்க்கிறார். ஹீரோ சிவகுமார் வேடத்துக்கு ஏற்ப எதார்த்த நடிப்பில் கவர்கிறார்.
ராம்ஸின் 70ஸ் கிட்ஸ் ரவுடித்தனம் செம அலப்பறை.

நண்பர்களுடன் இணைந்து சுபா செந்தில் படத்தை தயாரித்திருக்கிறார்.

சிவானி செந்தில் அடுத்த சுந்தர்.சி போல் ஒரு தரமான காமெடி கதையை அருமை யாக இயக்கியிருக்கிறார்.

ஜோஸ் ப்ராங்க்ளின் இசை காட்சிகளில் சுணக்கம் ஏற்படாமல் பின்னணி இசை யில் ஸ்கோர் செய்திருக்கிறரார். தொடக்கத்தில் ஒலிக்கும் சில பழைய பாடல்கள் காதில் ரீங்காரமிடுகிறது.

ஈஸ்வரன் தங்கவேலு ஒளிப்பதிவு பயண கதையின் களைப்பு தெரியாமல்  பார்த்துக்கொள் கிறது.

டேக் டைவர்ஷன்- அரங்கு நிறையும் காமெடி  மழை.

Related posts

பூம் பூம் காளை (பட விமர்சனம்)

Jai Chandran

Aranmanai 3’ garners over 7 Crore streaming minutes on ZEE5 in 12 days

Jai Chandran

ராம் பொதினேனியின் “டபுள் ஐஸ்மார்ட் டீசர் மே 15 வெளியீடு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend