நடிகை வனிதா
நடிகை வனிதா திருமணம்..
டிவி தொழில் நுட்ப கலைஞரை மணக்கிறார்
நடிகை வனிதா 1995-ம் ஆண்டு விஜய் நடித்த ‘சந்திரலேகா’ படத்தில் அறிமுகமானார். ராஜ்கிரண் நடித்த மாணிக்கம் , சத்யராஜ் நடித்த ஹிட்லர் பிரதர்ஸ். படங்களில் நடித்திருக்கிறார்.
வனிதா டிவி நடிகர் ஆகாஷ் என்பவரை மணந்தார் வனிதா. கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் விவாகரத்து பெற்றார். பின்னர் தொழில் அதிபர் ஆனந்த் ஜெய் ராஜனை மணந்தார், அவரிடமிருந்து பிரிந்தார்.
வனிதா தற்போது டிவி தொழில் நுட்ப கலைஞர் பீட்டர் பால் என்பவரை வரும் 27 ம் தேதி மணக்கிறார்.
வனிதா நடிகர் விஜயகுமார் நடிகை மஞ்சுளா தம்பதி மகள் ஆவார்.