Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஒ என் வி கேரள விருதை திருப்பி அளித்த வைரமுத்து.. காரணம் என்ன?

கவிப்பேரரசு வைரமுத்துக்கு கேரள அமைப்பு ஒ என் வி இலக்கிய விருது அறிவித்தது. பின்னர் சில்ர் இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வைரமுத்துக்கு அறிவித்த ஒ என் வி விருது மற்பரிசீலனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையறிந்த வைரமுத்து குறிபிட்ட ஒ என் வி விருதை திருப்பி அளிப்பதாக தெரிவித்திருக்கிறார்.

அதில்,’ ஓ.என்.வி இலக்கிய விருதைத் திருப்பித் தருகிறேன்
பரிசுத்தொகை கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தருவதாக
கவிஞர் வைரமுத்து அறிவித்துள்ளார்; இதுக்பற்றி அவர் கூறியுள்ளதாவது:

அனைவரையும் வணங்குகிறேன்.
கேரள மாநிலத்தின் பெருமைமிக்க ஓ.என்.வி இலக்கிய விருது இந்த ஆண்டு எனக்கு வழங்கப்படுவதாக ஓ.என்.வி கல்சுரல் அகாடமி அறிவித்தது; நானும் நன்றி பாராட்டி வரவேற்றேன்.
ஆனால், காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலபேரின் குறுக்கீட்டினால் அந்த விருது மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டிருப்பதாய் அறிகிறேன்.
இது என்னையும் கவிஞர் ஓ.என்.வி குரூப்பையும் சிறுமைப் படுத்துவதாகுமோ என்று சிந்தையழிகிறேன்.
அறிவார்ந்த நடுவர் குழுவும் இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டுவிடக்கூடாதே என்றும் தவிக்கிறேன். அதனால் சர்ச்சைகளுக்கிடையே இந்த விருதைப் பெறுவதை நான் தவிர்க்கவே விரும்புகிறேன்.
ஒன்றுமட்டும் உறுதியாகச் சொல்கிறேன். நான் மிக மிக உண்மையாய் இருக்கிறேன். என் உண்மையை யாரும் உரசிப் பார்க்கத் தேவையில்லை. அதனால் திட்டவட்டமான ஒரு முடிவை எடுத்திருக்கிறேன்; அதை மிகுந்த தெளிவோடும் அன்போடும் அறிவிக்கிறேன்.
ஓ.என்.வி இலக்கிய விருது அறிவிப்பை நான் ஓ.என்.வி கல்சுரல் அகாடமிக்கே திருப்பி அளிக்கிறேன். எனக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகை ரூபாய் 3லட்சத்தைக் கேரள முதலமைச்சரின் நிவாரண நிதியில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று அன்போடு வேண்டுகிறேன்.
மற்றும் மலையாள மண்மீதும் மக்கள்மீதும் நான் கொண்டிருக்கும் அன்பின் அடையாளமாக என்னுடைய பங்குத்தொகையாக ரூபாய் 2லட்சத்தைக் கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தனிப்பட்ட முறையில் நான் வழங்குகிறேன்.
தமிழுக்கும் மலையாளத்துக்குமான சகோதர உறவு தழைக்கட்டும்.
இந்த விருது அறிவிப்பைக் கேட்டு என்னைப் பேருள்ளத்தோடு வாழ்த்திப் பெருமை செய்த தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், உள்ளன்போடு வாழ்த்திய உலகத் தமிழர்களுக்கும், ஊடக உறவுகளுக்கும் என் நன்றி.

இவ்வாறு கவிஞர் வைரமுத்து கூறி உள்ளார்.

Related posts

என் இதயத்தில் தமிழ்நாட்டுக்கு தனி இடம்: நடிகை பிந்து மாதவி !

Jai Chandran

விஜய் சேதுபதி – சத்யராஜ் இணையும் புதிய படம் தயாரிப்பேன்: ஐசரி கணேஷ் பேச்சு

Jai Chandran

புனீத் ராஜ்குமாருக்கு அர்ப்பணிக்கும் படம் ட்யூட்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend