படம் : பொன் மாணிக்கவேல்
நடிப்பு: பிரபுதேவா, நிவேதா பெதுராஜ், மகேந்திரன், சுரேஷ்மேனன்,
தயாரிப்பு: நேமி சந்த் ஜபக், ஹிதேஷ் ஜபக்
இசை: டி.இமான்
ஒளிப்பதிவு: கே.ஜி.வெங்கடேஷ்
இயக்கம்:ஏ.சி.முகில் செல்லப்பன்
ரிலீஸ்: டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார்
பி.ஆர்.ஓ: யுவராஜ்
நீதிபதி ஒருவர் கழுத்தை வெட்டி கொல்லப்படுகிறார். அதில் துப்பு துலக்க போலீஸ் முயன்றும் போதிய ஆதாரம் கிடைக்கவில்லை. சிறப்பு அதிகாரியாக பிரபுதேவா நியமிக்கப்படுகிறார். அவர் அக்கறை காட்டாமல் விசாரணை நடத்து வதால் உடனிருக்கும் இன்ஸ்பெக்டர் எரிச்சல் அடைகிறார். ஒரு சமயம் இன்ஸ்பெக்டரையும் அவரது மகளையும் ஒரு கூட்டம் கடத்துகிறது. அவரையும் குழந்தையையும் பிரபுதேவா காப்பாற்று கிறார். அதன்பிறகு பிரபுதேவா சொல்வது போல் நீதிபதி கொலை வழக்கில் இன்ஸ் பெக்டர் ஒத்துழைக்கிறார். இந்நிலைல் மல்டி மில்லினர் சுரேஷ் மேனனை கொல்வதற்கு ஒரு கூட்டம் திட்டமிட் டிருப்பதாக பிரபுதேவா சொல்லி அவருக்கு பாதுகாப்பு அதிகாரியாக மாறுகிறார். ஆனாலும் சுரேஷ்மேனனை கொல்லும் முயற்சி தொடர்கிறது. இதில் அடுத்தடுத்து சிலர் சுட்டுக்கொல்லப்படு கின்றனர். இந்த கொலைக்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன என்பதை கிளைமாக்ஸ் சொல்கிறது.
வழக்கமாக டான்ஸ் நாயகனாக பார்க்கப் படும் பிரபுதேவா இதில் போலீஸ் அதிகாரி பொன் மாணிக்கவேல் பாத்திரம் ஏற்றிருக்கிறார். அதில் ஃபிட்டாக பொருந்தியும் இருக்கிறார். நீதிபதி கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு அதிகாரியாக பிரபுதேவா நியமிக்கப்பட்ட பிறகும் அவர் அந்த விசாரணையில் முனைப்பு காட்டாமல் மெல்லமாக நகர்வுகளை மேற்கொள்ளும்போதும், பிரபு தேவாவுக்கே தெரியாமல் மற்றொரு போலீஸை இந்த வழக்கில் உளவு பார்க்கச் சொல்லி உயர் போலீஸ் அதிகாரிகள் ஏற்பாடு செய்திருப்பதும் ஏதோ பெரிய விஷயம் இந்த கொலை வழக்கிற்கு பின்னால் இருக்கிறது என்பதை யூகிக்க முடிகிறது.
சண்டை காட்சிகளில் பிரபுதேவா பீய்த்து உதறி இருக்கிறார். சில காட்சிகளில் இது பிரபுதேவா தானா என்று எண்ணும் அளவுக்கு ரிஸ்க் எடுத்து மோதி இருக்கி றார். டான்ஸ் ஹீரோ என்ற தனது அடையாளத்தை மாற்றி ஆக்ஷன் ஹீரோ என்ற புதிய அடையாளத்துக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறார்.
ஹீரோயின் நிவேதா பெதுராஜ் பிரபு தேவாவின் மனைவியாக வந்துவிட்டு செல்கிறார். கிக்காக ஒரு பாடலுக்கு ஆடவும் செய்கிறார்.
மறைந்த இயக்குனர் மகேந்திரன் இதில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். பேத்தி மீது பாசம் வைத்திருக்கும் தாத்தாவாக சஸ்பென்ஸ் ரோலில் வருகிறார். சுரேஷ்மேனன்தான் வில்லன் என்று பார்த்தால் அவருக்கு மேல் இன்னொரு வில்லனை புகுத்தி பரபரப்பை அதிகரிக்க செய்திருக்கிறார் இயக்குனர்.
கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு ஆக்ஷன் காட்சிகளை அசத்தல் காட்சிகளாக மாற்றி இருக்கிறது. டி.இமான் இசையில் 2 பாடல்கள் ஏற்கனவே ஹிட்.
இயக்குனர் ஏ.சி.முகில் செல்லப்பன் ஹீரோ பிரபுதேவாவை ஆக்ஷன் ஹீரோ களத்தில் நன்றாகவே பயன்படுத்தி இருக்கிறார். ரசிகர்களின் ஏக்கத்தை போக்க நடன காட்சி ஒன்றையும் மிக்ஸ் செய்திருப்பது பிளஸ்.
பொன் மாணிக்கவேல் – பிரபுதேவாவின் புதிய அவதாரம்.