Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நானும் ஒரு பத்திரிகையாளர் தான் : உதயநிதி ஸ்டாலின்.

பத்திரிகையாளர்களுக்கு கொரோனா கால நிவாரண பொருட்கள்
மற்றும் பாதுகாப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்வு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று நடந்தது.

திமுக இளைஞர் அணி மாநில செயலாளரும், திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பத்திரிகையாளர்களுக்கு கொரோனோ தடுப்பு பாதுகாப்பு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது,
எனது தாத்தா கலைஞர் கருணாநிதி மட்டுமல்ல நானும் ஒரு பத்திரிகையாளர்தான். ஆகையால், பத்திரிகையாளர்களுக்கு எந்த நேரமும் உதவிட தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார். மேலும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வைக்கப்பட்டுள்ளது என்றும் அவற்றை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, விரைவில் நிறைவேற்றி தர முயற்சி செய்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

சென்னை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகள் பாரதி தமிழன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.

Related posts

செய்தி துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்த தயாரிப்பாளர் ஜெயமுருகன்

Jai Chandran

PVRCinemas reopens on August 26th

Jai Chandran

Doctor Shreeprakash initiative on translated book Thirukural..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend