முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளான இன்று அவருக்கு இலட்சிய திராவிட முன்னேற்ற கழக தலைவர் டி.ராஜேந்தர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவர் கூறியதாவாது:
எதிர்ப்புகளை எதிர்கொண்டு
எதிர் நீச்சல் மேற்கொண்டு
எதிரிகளின் எண்ணிலாவகை கண்டு
எதிர்பார்ப்புடைய மக்களை மனதிற்கொண்டு
எல்லாம் வல்ல இறைவனின் துணைகொண்டு
எதிர்கட்சித் தலைவராய் போராட புறப்பட்டிருக்கும்
மாண்புமிகு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு இன்று பிறந்த நாள்
இனி அவர் வாழ்வில் வரும் நாட்கள் ஆகட்டும் சிறந்த நாள்
இதயம் கனிந்த இலட்சியம் நிறைந்த வாழ்த்துக்கள்
இவ்வாறு டி. ராஜேந்தர் கூறி உள்ளார்,