Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

டூடி (பட விமர்சனம்)

படம்: டூ டி

நடிப்பு: கார்த்திக் மதுசூதன், ஷ்ரிதா சிவதாஸ், ஜீவா ரவி, ஸ்ரீ ரஞ்சனி, சனா ஷாலினி, ஜீவி மதுசூதன், உத்ரா

தயாரிப்பு: கனெக்டிங் டாட் புரடக்‌ஷன்

இசை: கே.சி.பாலசாரங்கன்

ஒளிப்பதிவு: மதன் சுந்தர்ராஜ், சுனில் . ஜி.என்.

இயக்கம்: கார்த்திக் மதுசூதனன், சாம் ஆர்.டி எக்ஸ்.

பி ஆர் ஒ: மணவை புவன்

மூன்று முறை காதல் தோல்வி அடைந்த கார்த்திக் ( கார்த்திக் மதுசூதனன்) வாழ்க்கையில் இனி காதலும் இல்லை, கல்யாணமும் இல்லை என்று முடிவு செய்து குடியும், குட்டியுமாக சுற்றுகிறார். பப்பில் பாடகராக இருக்கும் கார்த்திக் எந்தப் பெண்ணையும் வளைத்துபோடும் வசீகர பேச்சுக்  காரர். நண்பனின் கல்யாணத்தில் இந்துவை ( ஷ்ரத்தா சிவதாஸ்) சந்திக்கிறார். அவரையும் தன் வலையில் வீழ்த்த முயல்கிறார் கார்த்திக். ஆனால் அவர் கார்த்திக் பேச்சில் மயங்கினாலும் அவரது இஷ்டத்துக்கு சம்மதிக்க மறுக்கி  றார். நண்பர்களாக தொடர்ந்து பழகுகின்றனர். ஒரு கட்டத்தில் கார்த்திக் மீது காதல் கொள்கிறார். கார்த்திக்கும் காதலை ஏற்க எண்ணும் நேரத்தில் தன்னுடைய பழைய காதல்பற்றி சொல்கிறார் இந்து. அதைக்கேட்டு அப்செட்டாகும் கார்த்திக் அவரை வெறுத்து பிரிகிறார். இந்நிலை யில் இந்துவுக்கு திருமணம் ஏற்பாடாகிறது. காதலில் இரண்டாவது சான்ஸ் பொருத்த. மாக இருக்கும் என்று சிலர் தரும் அட்வைஸை ஏற்று மனம் மாறும் கார்த்திக் இந்துவை தேடி வருகி றார். மணமேடையில் இந்து எடுக்கும் முடிவு என்ன என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.

புதுமுகம் கார்த்திக் மதுசூதனன் ஹீரோவாக நடித்திருப்பதுடன் இரண்டு இயக்குனர்களில் ஒருவராக. பணியாற்றியுள்ளார்.

நரைத்த தாடியுடன் 33 வயதுக்  காரராக நடித்திருக்கும் கார்த்திக் மதுசூதனன் நடிப்பிலும், கதாபாத் திரத்திலும் முதிர்ச்சியும் தெளிவும் காட்டியிருக்கிறார். கண்ட பெண் களுடன் உறவு வைத்துக் கொண்டு சுற்றும் அவர் “பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்” என்ற பாடலை நினைவூட்டுகிறார்.

நண்பனின் கல்யாண வீட்டில் தனியாக அமர்ந்திருக்கும் ஷ்ரத்தாவை கண்டதும் அவர் அருகில் சென்று அமர்ந்து அவருக்கு கார்த்திக் நூல் விடுவதும், நைசாக பேசி தன் வீட்டுக்கு வரவழைத்து அவரை கட்டிப்பிடித்துமாக ஷாக் கொடுக் கிறார். தான் அந்தமாதிரி பெண் இல்லை என்பதை ஷ்ரத்தா உணர்த்தியதும் அவரை கட்டாயப்படுத்தாமல் விலகி நின்று மீண்டும் நண்பர்போல் கார்த்திக் பழகுவது ஜென்டிலான காட்சி.

தான் வேறு ஒருவரை காதலித்தாக ஷ்ரத்தா சொன்னதும் அப்செட் டாகும் கார்த்திக் அவரை எடுத்தெறிந்து விட்டு செல்லும் போது ” நீ எத்தனை பேரை காதலிச்ச அவர் ஒருத்தரை காதலித்தால் தாப்பா” என்று கார்த்திக்கை பார்த்து  ஆடியன்ஸ் கேட்பது  எதிரொலிக்கிறது.

பல பெண்களுடன் தான் சுற்றுவ தாக கார்த்திக் சொன்னபோதும் அதை பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் அவரை ஷ்ரத்தா காதலிப்பது எந்த ஊர் நியாய மென்று தெரியவில்லை.

5 வருடமாக காதலித்தவனை மறந்துவிட்டு 7 நாட்கள் பழகிய கார்த்திக் மதுசூதனனை ஷ்ரத்தா காதலிக்க துடியாய் துடிப்பதும் முரண்பாடு.

காதல் தோல்வி என்று யாரையும் சாகடிக்காமல் காதல் தோல்வியை பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்று ஒரு மெசேஜ் சொல்லியிருப்பது காதல் தோல்வி அடைந்தவர்கள்  மனதை தேற்றிக் கொண்டு வாழ்க்கையில் தொடர்ந்து பயணிக்க பாசிடிவ் எண்ணத்தை உருவாக்கும்.

கிளைமாக்ஸில் அப்பா அம்மா பார்க்கும் மாப்பிள்ளையை கட்டிக்கொண்டு புது ஃலைபில் நுழையும் ஷ்ரத்தா, காதலிக்கு கல்யாணமான பிறகு அவருக்கு குடைச்சல் கொடுக்காமல் வந்த வழியே கார்த்திக் திரும்பிபிச் செல்வது என சுபமாக என்ட் கார்டு போடுகின்றனர்.

படத்தை இளைஞர்களுக்கான புதுவித டச்சுடன் இயக்கி இருக்கின்றனர் இயக்குனர்கள் கார்த்திக் மதுசூதனன், சாம் ஆர்.டி எக்ஸ்.

மதன் சுந்தர்ராஜ், சுனில் ஜி என் தெளிவான ஒளிப்பதிவு அழகு சேர்கிறது.

கே சி.பாலசாரங்கன் இசையும் சோடைபோகவில்லை

டூடி – காதல் தோல்வி கஜினிகளுக்கு மனதை தேற்றும் மருந்து.

 

 

Related posts

Makers announce the wrap of “Ponniyin Selvan – 1”

Jai Chandran

Our Devi Foundation volunteers distributed food

Jai Chandran

ஹாலிவுட் செல்வதற்கு முன் டி.எஸ்.கேவை பாராட்டிய தனுஷ்..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend