படம்: TN 2026 தங்க நட்சத்திரம்
நடிப்பு: நட்டி, தம்பி ராமையா, எம் எஸ் பாஸ்கர், இளவரசு, தலைவாசல் விஜய், சிரிட்டா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், ரெடின் கிங்ஸ்லி,
தயாரிப்பு: கண்ணன் ரவி குரூப்ஸ் கண்ணன் ரவி
இசை: தர்புகா சிவா
ஒளிப்பதிவு : பி. ஜி.முத்தையா
இயக்கம்: உமாபதி எஸ் ராமையா
பி ஆர் ஓ : சதீஷ் (AIM )
கதை :வெளி மாநிலத்திலிருந்து தமிழில் நடிக்க வரும் ஹீரோ குல்கந்த் குமார் வளரும் நிலையில் பலரால் அவமானப்படுத்தப்படுகிறார். பொள்ளாச்சி பகுதியில் நடக்கும் படப்பிடிப்பில் பங்கேற்கும்போது அந்த ஊரின் பண்ணையார் மன்றாடியார் பார்வை உங்களுக்கு குல்கந்த் குமாருக்கு கிடைக்கிறது. தனது செலவில் அவரை வசதியாக பராமரிக்கும் மன்றாடியார் படிப்படியாக அவரது வளர்ச்சிக்கு துணையாக நிற்கிறார். 200 கோடி சம்பளம் வாங்கும் பெரிய நடிகராக மாறிய குல்கந்து குமார் அரசியல் கட்சியை தொடங்க திட்டமிடுகிறார். அதற்கான வேலைகள் நடக்கிறது. அவரது அந்த எண்ணம் என்னவாகிறது, முதலமைச்சராக வேண்டும் என்ற கனவு நிறைவேறுகிறதா என்பதற்கு கிளைமாக்ஸ் எதிர்பாராத பதில் அளிக்கிறது.
தற்போதைய ட்ரண்டுக்கு ஏற்ற அரசியல் கதையாக இதனை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் உமாபதி ராமையா.
குல்கந்து குமார் கதாபாத்திரத்தில் நட்டி நடித்திருக்கிறார். எந்த வேடம் கொடுத்தாலும் அதில் தன்னை பொருத்திக்கொண்டு நடிப்பதில் கெட்டிக்காரர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் நட்டி.
தமிழ் சரியாக பேசவராமல் அவர் கதாநாயகி இடம் இந்திக்காரன் பேசும் தமிழில், ‘முத்தம் ஒன்று தா என்று வசனம் பேசுவதாகட்டும், டஞ்சன் லாட்ஜில் நாற்றம் பொறுக்க முடியாமல் திணறுவது, ரயில் நிலையத்திலிருந்து பெட்டியை தூக்கி கொண்டு வரும் நட்டி, கார் டிரைவரை பார்த்து சாமான தூக்கு என்று சொல்வது என தொடக்க காட்சிகளிலேயே காமெடி கலவரத்தை தொடங்கி வைக்கிறார் நட்டி.

200 கோடி சம்பளம் வாங்கும் நடிகராக மாறிய பிறகு தனக்கு தொடக்க காலத்தில் ஆதரவு கொடுத்த தம்பி ராமையாவை எடுபுடி ஆள் போல் மாற்றி அலற விடுவது இன்னொரு காமெடி கூத்து.
விஜய் போலவே கெட்டப்பை வைத்துக் கொண்டிருக்கும் நட்டி, ஒரு பக்கம் மனைவி இருந்தாலும் இன்னொரு பக்கம் நடிகையை கரெக்ட் செய்வது, கட்சி தொடங்குவதற்காக தொழில் அதிபர்களை வளைத்து போடுவது என பல கும்மாங்குத்து வேலைகள் செய்து அரங்கை கதற விடுகிறார் நட்டி.
இரண்டாவது ஹீரோ என்று சொல்லும் அளவுக்கு தம்பி ராமையா செம ஹராத்து செய்திருக்கிறார். நட்டிக்கு ஆல் இன் ஆளாக இருந்து அவரை அரசியலில் இறக்கி விட்டு முதலமைச்சராக துடிப்பது பிஸ்சி போனந்த் நபரின் செயல்பாட்டை தோலுரிருப்பதுபோல் இருக்கிறது.கூடவே எம் எஸ் பாஸ்கர், இளவரசு, ரெடின் கிங்ஸ்லி தங்கள் பங்கிற்கு அரசியல் நய்யாண்டி செய்து வயிற்றை பதம் பார்க்கின்றனர்.
இந்த படம் ரஜினியின் அரசியலை பேசுகிறதா, விஜயின் அரசியலில் பேசுகிறதா அல்லது இவர்கள் இருவரின் அரசியலும் சேர்த்து ஒன்றாக பேசியிருக்கிறதா என்பதெல்லாம் தியேட்டரில் ரசிகர்கள் அமர்ந்து படத்தை பார்க்கும் போது தான் முடிவு செய்ய முடியும் என்றாலும் எப்படியும் இது ஒரு விவாத பொருளாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை. இயக்குனர் உமாபதி எஸ் ராமையா தனது முதல் பட இயக்கத்தையே இப்படி ஒரு அரசியல் சட்டையர் படமாக தந்திருப்பது ஆச்சரியம். இந்த கதைக்குப் பின்னால் தம்பி ராமையா கைவண்ணம் இருப்பதை உணர முடிகிறது.

படத்தை கண்ணன் ரவி குரூப்ஸ் கண்ணன் ரவி தயாரித்திருக்கிறார்.
தர்புகா சிவா இசை வீணில்லை. பி ஜி முத்தையா ஒளிப்பதிவு பளிச்சிடுகிறது.
TN 2026 தங்க நட்சத்திரம் – ஸ்டார் அரசியலைக் கலாய்க்கும் துணிச்சலான படம்.

Review By
K Jayachandhiran
www.t rending.cinemas now. com
