Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

எட்டர்னல்ஸ் (பட விமர்சனம்)

படம் : எட்டர்னல்ஸ்

நடிப்பு:ஜெம்மா சான், ரிச்சர்ட் மாட்டென், குமாலி நாஞ்ஜினி, லியா மெக்ஹக்., பிரைன் டயர் ஹென்றி, லாரென் ரிடிஆப், , பேரி கியோகஹன், டான் லீ, ஹரிஷ் படேல், சல்மா ஹாயெக், ஏஞ்சலினா ஜோலி,

இசை: ராமின் டிஜாவாடி

ஒளிப்பதிவு: பென் டேவிஸ்

இயக்கம்: சியோயி ஜஹாஒ

தயாரிப்பு: மார்வெல் ஸ்டுடியோஸ் கெவின் ஃப்யிஜி, நடே மோரே

ரிலீஸ்: வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்

கி மு 5000 ஆண்டுகளுக்கு முன் சூப்பர் சக்திகள் கொண்ட 10 எட்டர்னல்ஸ் அதாவது ஏலியன்களை படைப்பு  கடவுளான  செலெஸ்ட்ரல் ஆரிஷம் பூமிக்கு அனுப்பி, அங்கு மக்களை கொல்லும் டேவியண்ட்ஸ் என்ற ராட்சத மிருகங்களை கொல்ல ஆணையிடு கிறார். அவைகளை கொன்று பலநூறு ஆண்டுகள் ஆனபிறகும் சூப்பர் பவர் கொண்ட எட்டர்னல்ஸை பூமியிலேயே மனிதர்களோடு தங்கி இருக்கும்படி ஆரிஷம் ஆணையிடுகிறார். அதன்படி தங்கி இருக்கும் நிலையில் மீண்டும் டேவியன்ட்ஸ் ராசத மிருகங்கள் உருவாகின்றன. அவைகளை மீண்டும் எட்டர்னல்ஸ் அழிக்கின்றனர். இந்நிலையில் எட்டர்னல்களுக்கு உலகம் அழியப் போகிறது என்ற தகவல் வருகிறது. இதில் பல கோடி மக்கள் இறப்பார்கள் என்று தெரிந்ததும் எட்டர்னல்களில் சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். உலக அழிவை தடுக்க முயற்சிக்கின்றனர். இதனால் சூப்பர் மேன்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்படுகிறது. உலக அழிவை தடுக்கக் கூடாது, ஆரிஷமின் ஆணைக்கு கீழ்படிய வேண்டும் இல்லாவிட்டால் மற்ற எட்டர்னல்களை கொல்ல தயங்க மாட்டேன் என்று ஒரு சூப்பர்பவர் மேன் எச்சரிக்கிறார். அதையும் மீறி மற்ற எட்டர்னல்கள் உலக அழிவை தடுக்கும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதில் வெல்வது யார் என்பதை அதிர வைக்கும் ஆக்‌ஷன் காட்சிகளுடன் படம் விளக்குகிறது.

ஜெம்மா சான், ரிச்சர்ட் மாட்டென், ஏஞ்சலினா ஜோலி மூவரும் மிக முக்கிய பாத்திரங்கள் ஏற்றிருக்கின்றனர். இவர் களுடன் சக எட்டர்னல்களாக நடித்திருப்பவர்களும் திறமையை காட்டத் தவறவில்லை.

7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மிருகங்கள் தனது கொடூரத்தை மனிதர்கள் மீது மட்டுமல்லாமல் எட்டர்னல்கள் மீதும் காட்டி அவர்களை தாக்குவது பரபரப்பை ஏற்படுத்துகிறது.

கண்களிலிருந்து காஸ்மிக் கதிர்களை செலுத்தி மற்றவர்களை எரித்து பந்தாடும் ரிச்சர்ட் வில்லனாகவே மாறி விடுகிறார். ஏஞ்சலினா ஜோலியும் தனக்கு ஏற்படும் கெட்ட சக்தியின் பீடிப்பால் திடீர் திடீரென்று தன்னுடைய ஆட்களையே தாக்கும்போது பாதி வில்லியாக தோன்றுகிறார்.

செர்ஸியாக வரும் ஜெம்மா சான் மனித உணர்வுகளுக்குள் ஆட்பட்டு மனிதர்களை காப்பாற்றும்போரில் உயிரை பணயம் வைக்க துணிவது செண்டிமெண்ட் டச்.

கைகளாலேயே கருவிகளை உருவாக்கு பவரும் காற்றுபோல் பறந்து தாக்கும் பெண்ணும், மனிதர்களின் கெட்ட எண்ணங்களை மாற்றும் எட்டர்னல்ஸ் என பலவித கலவையாக கதாபாத்திரங் களை உருவாக்கி இருப்பதும் அதற்கேற்ப கற்பனைக்கு எட்டாத அரங்குகளையும். கிராபிக்ஸ் காட்சிகளையும் அமைத்து பிரமிப்பை ஏற்படுத்தி இருக்கிறார் இயக்குனர் சோயி ஸ்ஹாஹோ. ராமின் டிஜாவாடி ஹாலிவுட் இசை பிரமாண்டத்தை இன்னும் பிரமாண்டமாக்குகிறது.

மார்வெல் காமிக் கதைகளை அடிப்படையாக கொண்டு 200 மில்லியன் டாலர் செலவில் உருவாகி இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜப்பான், லண்டன், மும்பை, பாபிலோனா, மெசபடோமியா, அமேசான் காடுகள் என உலகின் பல முக்கிய பகுதிகளில் படமாகி இருக்கிறது. பழமையும், புதுமையையும் பகுத்து காட்டி இருக்கும் ஒளிப்பதிவாளரின் திறனையும் பாராட்டியாக வேண்டும்.

எட்டர்னல்ஸ் -மனித அழிவை தடுக்க சூப்பர்மேன்கள் நடத்தும் போராட்டம்.

Related posts

குறள் ஆன நடிகை மமிதா பைஜூ

Jai Chandran

“யெல்லோ” பட இசை – டிரெய்லர் வெளியீட்டு விழா.. 

Jai Chandran

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ராதிகாவுக்கு சாதனை விருது

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend