முதல்வரின் கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக முதல்வர் மு.க.ஸ்டலினை நடிகர்கள் தியாகராஜன், பிரசாந்த் நேரில் சந்தித்து ரூ 10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்கள்.
பின்னர் தியாகராஜன் பிரசாந்த் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:
முதலமைச்சரை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தோம்..மேலும் கொரோனாவிற்கான முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளோம்
முதலமைச்சரின் வேகம் சிறப்பாக உள்ளதோடு, செயல்பாடுகள் சிறப்பாக இருக்கிறது..மிகவும் கடினமாக உழைத்து வருகிறார்..கலைஞரை பார்ப்பது போலவே உள்ளது.அவரை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி
இவ்வாறு அவர்கள் கூறினர்.