படம்: தீராக் காதல்
நடிப்பு: ஜெய் ஐஸ்வர்யா ராஜேஷ் ஷிவதா, பேபி விருதி விஷால், அப்துல் லீ, அஸ்மத் கான்
தயாரிப்பு: லைகா சுபாஷ்கரன்.
தயாரிப்பு நிறுவன தலைமை: ஜி.கே.எம்.தமிழ்குமரன்
இசை: சித்து குமார்
ஒளிப்பதிவு: ரவி வர்மன் நீலமேகம்
இயக்கம்: ரோஹின் வெங்கடேசன்.
பிஆர் ஓ: யுவராஜ்
மனைவி வந்தனா (ஷிவதா) குழந்தை ஆர்ததியுடன் சந்தோஷமாக வாழும் கவுதம் ( ஜெய்) ஒரு நாள் தனது பழைய காதலி ஆரண்யாவை (ஐஸ்வர் யாவை) ரயில் நிலையத்தில் திடீரென்று சந்திக்கிறான். இருவரும.நலம் விசாரித்துக் கொண்டு பிரிந்து செல்கின்றனர். ஆரண்யா கணவர் பிரகாஷ் (அஸ்மத் கான்) ஈகோ மனம் கொண்டவர். ஆரண்யாவிடம் சண்டைபோடுவதே வேலையாக வைத்திருக்கிறான். ஒரு நாள் கோபத்தில் ஆரண்யாவை கடுமை யாக தாக்கியதும் கோபித்துக் கொண்டு வீட்டிலிருந்து வெளி யேறுகிறாள் ஆரண்யயா. பழைய காதலன் கவுதமை.சந்தித்து இதுபற்றி முறையிடுகிறாள். அவளுக்கு கவுதம் ஆறுதல் கூறுகிறான். அவளோ மனைவியை பிரிந்து வா நாம் தனியாக வாழலாம் என்று சொல்ல அதைக்கேட்டு அதிர்ச்சி அடைகி றான். மனைவி, குழந்தையை பிரிந்து வரமுடியாது என்று கவுதம்.கூற அவனை தன் வழிக்கு இழுக்க டார்ச்சர் செய்யத் தொடங்கு கிறாள் . அடுத்து என்ன நடக்குமோ என்ற நிலையில் இருவரும் ஒன்றாக இருப்பதை வந்தனா பார்த்து விடுகிறாள். இதனால கவுதம் வாழ்வில் புயலடிக்கிறது. இறுதியில் நடப்பது என்ன என்பது கிளை மாக்ஸ்.
பாலச்சந்தர், பாலுமகேந்திரா பாணியிலான கதைகள் வருவ தில்லையே என்று ஏங்குபவர் களுக்கு கிடைத்திருக்கும் படம் தான் தீராக் காதல்.
இன்றைய காலகட்டத்தில் முதல் காதல் இல்லாதவர்கள் எண்ணிக்கை மிக குறைவு என்ற நிலைதான் உள்ளது.பழைய காதலியை மீண்டும் சந்திக்கும் போது அவள் மீது பரிதாபப்பட்டு நம்மை விட்டால் அவளுக்கு ஆதரவு தர யாரும் இல்லையே என்று பரிதாபப்பட்டு ஆதரவு காட்டத் தொடங்கினால் அது வாழ்க்கையை எங்கு கொண்டு சென்று நிறுத்தும் என்பதை ஜெய்i. ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா மூவரும் கண்முன் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.
பழைய காதலி ஐஸ்வர்யாவை ரயில் நிலையத்தில் சந்திக்கும் ஜெய் அவருடன் மனம்விட்டு பேசுவது பலரது வாழ்வில் நடந்தி ருக்கும் எதார்த்தம் பின்னர் அதுவே தொடர்கதையாகி குடும்பத்தில் புயலை கிளப்புவது இன்றைக்கு சிலரது வாழ்வில் அடித்துக் கொண்டிருக்கும் புயலை படம் பிடித்துக் காட்டுகிறது. அதற்கு தீர்வுக். காண முடியாமல் தவிக்கும் ஆண் மட்டுமல்ல பெண்ணுக்கு மாக இந்த காட்சிகள் பொருந்தும்.

ஐஸ்வர்யா தன்னை விடாமல் பின் தொடர்ந்து கொடுக்கும் தொல்லை நாளுக்கு நாள் அதிகரிக்க அதைக் கண்டு ஜெய் பயத்தில் அல்லுவிட்டுப் போய் தவிக்கும் காட்சிககளில் அரங்கில் அப்ளாஸ் அள்ளுகிறது.
வாழ்ந்தால் உன்னோடுதான். என்று ஐஸ்வர்யா செய்யும் டார்ச்சர் ஜெய்யின் குழந்தை காணாமல் போனவுடன் திடீரென்று குறைந்து அவரை நிம்மதியாக வாழவிடுவ தாக கூறுவதெல்லாம் சினிமாத் தனம்தான். அவசர அவசரமாக கிளைமாக்சை. முடித்ததுபோல் உள்ளது.
இயக்குநர் ரோஹின் வெங்க டேசன் கதையின் போக்கை சரியாக கொண்டு சென்றாலும் இப்படியொரு எளிதான தீர்வு எல்லோருக்கும் கிடைத்துவிடும் எனச் சொல்வதைத்தான் ஏற்க முடியவில்லை.
லைகா சுபாஷ்கரன் தயாரிக்க தயாரிப்பு நிறுவன தலைமையை எந்த குறையும் வைக்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறார் ஜி.கே.எம்.தமிழ்க் குமரன்
சித்து குமார் பின்னணி இசை சீன்களை பில்டப் செய்திருக்கிறது. மெலடிப்பாடல்கள் நெஞ்சை வருடுகின்றன
ரவி வர்மன் நீலமேகம் ஒளிப்பதிவு காதல் குளுமையை உணர வைக்கிறது.
தீராக் காதல் – மனதில் மறைத்த காதலை புதுப்பித்தால் நடக்கும் விபரீதம்.

