Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அமேசான் பிரைமில் தொடர்ந்து முதலிடத்தில் தண்டட்டி…

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் தயாரான தண்டட்டி கடந்த ஜூன் 23ல் திரையரங்கில் வெளியாகியது. பின் ஜூலை 14ந் தேதி அமேசான் பிரைமில் வெளியிடப்பட்டது.

கிராமத்து வாழ்வியலை, தண்டட்டி என்ற அப்பத்தாக்கள் அணிந்திருக்கும் நகையை வைத்து அழகுறச் சொல்லியிருந்த இப்படம் வெகு வரவேற்பை பெற்று வருகிறது.

நல்ல சினிமா என மக்கள் பார்த்துக் கொண்டாடும் ஒரு படமாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களைப் பார்க்க முடிகிறது. நல்ல சினிமாக்களை கொண்டாடும் ரசிகர்கள் மத்தியில் தண்டட்டி சென்று சேர்ந்துள்ளது.

அதன் காரணமாக வெளியிட்ட நாள் முதல் இன்று வரை அமேசான் பிரைமில் தண்டட்டி முதலிடத்தில் இருக்கிறது.

இயக்குநர் ராம் சங்கையா இயக்கிய இப்படத்தில் பசுபதி, ரோகினி, அம்மு அபிராமி, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் மகேஷ் முத்துசாமி. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக எஸ் லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ளார். இணை தயாரிப்பு ஏ. வெங்கடேஷ். நிர்வாகத் தயாரிப்பு ஷ்ராவந்தி சாய் நாத். தயாரிப்பு மேற்பார்வை ஏபி. பால்பாண்டி.

Related posts

‘துரந்தர் ‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ

Jai Chandran

Dhanush, Nagarjuna, Sekhar: DNS Launched With Pooja

Jai Chandran

காடு வெட்டி ( பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend