லெஜன்ட் சரவணன் ஹீரோவாக அறிமுகமாகும் படம் “தி லெஜன்ட்”
இப்படத்தின் கதை திரைக்கதையை எழுதி இயக்குகிறார்கள் ஜேடி-ஜெர்ரி. அதிரடி இசையை ஹாரிஸ் ஜெயராஜ் அமைத்துள்ளார்.
‘தி லெஜண்ட்’ படத்தின் பிரமாண்ட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடை பெற்றது. நிகழ்ச்சியையொட்டி அரங்கம் டிஜிட்டல் மயத்துக்கு மின்னொளியுடன் வண்ணமாக மாற்றப் பட்டிருந்தது.
இதில் நடிகைகள் தமன்னா, ஹன்சிகா, பூஜா ஹெக்டே, ராய் லட்சுமி, யாசிகா, ஊர்வசி ரவுட்டேலா உள்ளிட்ட 9 முன்னணி நாயகிகள் பங்கேற்றனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய லெஜண்ட் சரவணன், “ரஜினிகாந்த், விஜய் என் ரோல் மாடல். என்னை விமர்சிப்பவர்களுக்கு வாழ்த்துக்கள்” என்றார்.
தி லெஜண்ட் படம் பிரமாண்டமாகவும், சிறப்பாகவும் உருவாகி உள்ளதால், 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியிடப்படவுள்ளது. இதன் டிரெய்லர் களை நடிகர் சங்க தலைவர் நாசர், நடிகர்கள் பிரபு, விஜயகுமார், சுமன், நடிகை லதா, தயாரிப்பாளர் அன்புச் செழியன் வெளியிட்டனர்.
பின்னர் பிரபு, விஜயகுமார் கூறும் போது,’சரவணன் உழைப்பதற்கு அஞ்ச வில்லை. அவரது உழைப்புதான் இன்று அவரை இங்கு நிறுத்தியிருக்கிறது” என்றனர்.
விழாவில் பங்கேற்ற நடிகை தமன்னா பேசும்போது, “சினிமாவில் நடிப்பது லெஜண்ட் சரவணனுக்கு நீண்டகால விருப்பம். என்றார்.
நாசர் பேசும் போது, நடிகர்சங்க கட்டிடம் கட்டுவதற்கு 3 கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்தவர் சரவணன் என்றும் அந்த பணம் 1000 குடும்பங்களின் பசியை போக்குவதாகவும் பாராட்டினார்
ஹாலிவுட் படத்திற்கு இணையான கதை என்பதால் இசையமைக்க ஒப்பு கொண்ட தாக ஹாரிஸ் ஜெயராஜ் கூறினார்.
மேலும் மயில்சாமி, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் மயிலாட்டம், பொயக்கால் குதிரை ஆட்டம், போன்ற கலைநிகழ்ச் சிகள், நடிகை லட்சுமிராய் நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்சிகள் நடந்தன.
அனைவரையும் பி ஆர் ஒ நிகில் முருகன் வரவேற்றார்.
இப்படத்தின் முதல் லிரிக்கல் பாடல் ’மொசலோ மொசலு’-வை பிரபல இயக்கு நர்கள் மணிரத்னம், ராஜ மெளலி மற்றும் சுகுமார் வெளியிட்டனர்.
பா விஜய் பாடல் வரிகளை இயற்ற, அர்மான் மாலிக் பாடியுள்ளார்.
ராஜு சுந்தரம் நடனம் அமைத் துள்ள ‘மொசலோ மொசலு’ பாடலில் பிக் பாஸ் பிரபலம் யாஷிகா ஆனந்த் உள்ளிட் டோருடன் தோன்றும் லெஜண்ட் சரவணனன், தனது நடன அசைவுகளால் அனைவ ரையும் கவர்ந் துள்ளார்.
இப்படத்தின் இரண்டாம் பாடலான பென்னி தயாள் மற்றும் ஜொனிதா காந்தி பாடி கவிஞர் சினேகன் எழுதிய ‘வாடி வாசல்’ சமீபத்தில் வெளியிடப் பட்டது.